நுவரெலியா பிரதேசத்தில் கேபிள் கார் செயற்திட்டத்தை நிர்மாணிப்பதற்கான ஒப்பந்தம் கைச்சாதிடப்பட்டுள்ளது.
சுவீடன் நாட்டு நிறுவனத்துடன் குறித்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.
2 கட்டங்களைக் கொண்ட கேபிள் கார் திட்டத்தின் கட்டுமானப் பணிகள் 18 மாதங்களுக்குள் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நானுஓயாவிலிருந்து நுவரெலியா வரை 4 கிலோமீற்றர் தூரத்தில் இரண்டு கட்டங்களாக நிர்மாணிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
இந்த கேபிள் கார் செயற்திட்டமானது சுவீடன் வெளிநாட்டு உதவித் திட்டத்தின் கீழ் முழுமையாக நிதியளிக்கப்பட்டுள்ளதுடன், 55 மில்லியன் அமெரிக்க டொலர் செலவில் கேபிள் கார் திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம், நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சகத்தின் கேட்போர் கூடத்தில் கைச்சாதிட்டப்பட்டது.