பிறப்புச் சான்றிதழ் இல்லாத குழந்தைகளை அடையாளம் கண்டு அவர்களுக்கு பிறப்புச் சான்றிதழ்களை வழங்க நன்னடத்தை, சிறுவர் பராமரிப்புச் சேவைகள் திணைக்களம் மற்றும் ஆட்பதிவு திணைக்களம் ஆகியன இணைந்து நடவடிக்கை எடுக்கவுள்ளது.
கணிசமான எண்ணிக்கையிலான குழந்தைகள் பிறப்புச் சான்றிதழ் இன்றி பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இம்மாதம் முழுவதும் பிரதேச செயலகங்களினூடாக இந்த செயற்பாடுகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
நன்னடத்தை, சிறுவர் பராமரிப்புச் சேவைகள் திணைக்களத்தின் கீழ் இயங்கும் பிரதேச செயலக அலுவலக மட்டத்தில் சேவைபுரியும் சிறுவர் உரிமை மேம்பாட்டு அதிகாரிகளினால் இந்த செற்பாடுகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் கே.ஜே. பண்டார தெரிவித்துள்ளார்.