follow the truth

follow the truth

October, 3, 2024
HomeTOP1இன்று உலக மது ஒழிப்பு தினமாகும் - அனைத்து மதுபானசாலைகளுக்கும் பூட்டு

இன்று உலக மது ஒழிப்பு தினமாகும் – அனைத்து மதுபானசாலைகளுக்கும் பூட்டு

Published on

உலக மது ஒழிப்பு தினம் இன்றாகும்.

உலகளவில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 3 மில்லியன் மக்கள் மதுவால் இறப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் மது பாவனையினால் நாளொன்றுக்கு ஏறக்குறைய 50 பேர் உயிரிழப்பதாகவும், வருடாந்தம் 237 பில்லியன் ரூபா நோயாளர்களுக்காக அரசாங்கம் செலவிடுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இலங்கையில் மது பாவனையை குறைப்பதற்கான முறையான வேலைத்திட்டமொன்றை அமுல்படுத்துமாறு அரசாங்கத்திடம் கோரப்பட்டுள்ளதாக மதுபானம் மற்றும் போதைப்பொருள் தகவல் நிலையத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் சம்பத் டி சேரம் தெரிவித்தார்.

இந்நிலையில், இன்றைய தினம் நாடளாவிய ரீதியில் மதுபானங்களை விற்பனை செய்வதற்கான அனுமதி பெற்ற அனைத்து இடங்களையும் மூடுமாறு கலால் ஆணையாளர் நாயகம் உத்தரவிட்டுள்ளார்.

மேலும், மதுபானக் குற்றங்கள், போதைப்பொருள் குற்றங்கள் மற்றும் புகையிலை குற்றங்கள் தொடர்பான முறைப்பாடுகளைப் பெறுவதற்கு கலால் திணைக்களத்தின் செயற்பாட்டு அறையுடன் இணைக்கப்பட்டுள்ள 1913 என்ற தொலைபேசி இலக்கம் 24 மணிநேரமும் பொதுமக்களுக்காக திறந்து வைக்கப்படும் என கலால் திணைக்களம் தெரிவித்துள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

தஹம் மற்றும் ராஜிகா தாயக மக்கள் கட்சியில் இணைவு

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான ராஜிகா விக்ரமசிங்க மற்றும் தஹம் சிறிசேன ஆகியோர் இன்று (03) தாயக மக்கள் கட்சியில்...

“அரச ஊழியர்களுக்காக துணை நிற்பேன்”

வினைத்திறன் மிக்க ஜனரஞ்சக அரச சேவையை உருவாக்க தம்மை அர்ப்பணிக்கும் அரச உத்தியோகத்தர்களுக்காக தாம் துணை நிற்பதாக ஜனாதிபதி...

எலிக்காய்ச்சல் பரவும் அபாயம்

நாட்டில் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் காணப்படுவதாக சுகாதார திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது. அதன்படி, இந்த வருடத்தில் இதுவரை நாட்டில் சுமார் 7,500...