follow the truth

follow the truth

October, 2, 2024
HomeTOP1இஸ்ரேலில் உள்ள இலங்கையர்களுக்கு விசேட அறிவிப்பு

இஸ்ரேலில் உள்ள இலங்கையர்களுக்கு விசேட அறிவிப்பு

Published on

இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல் நடத்தியதால், இஸ்ரேலில் உள்ள அனைத்து இலங்கையர்களையும் பாதுகாப்பான இடத்தில் தங்குமாறு இலங்கை தூதரகம் அறிவித்துள்ளது.

இதற்கிடையில், இஸ்ரேலில் உள்ள இலங்கையர்களுக்கு அத்தியாவசிய உணவு மற்றும் மருந்துகளை வைத்திருக்குமாறு இஸ்ரேலுக்கான இலங்கை தூதரகம் அறிவித்திருந்தது.

இவ்வாறானதொரு பின்னணியில், ஈரானிய தாக்குதல்களினால் இலங்கையர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டதாக தெரிவிக்கப்படவில்லை என இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர் நிமல் பண்டார தெரிவித்துள்ளார்.

இஸ்ரேல் மீது ஈரான் நேற்று (01) இரவு பாரிய ஏவுகணைத் தாக்குதலை நடத்தியது.

இஸ்ரேலின் அயர்ன் டோம் ஏவுகணை பாதுகாப்பு அமைப்பும், அமெரிக்காவின் எதிர் ஏவுகணை நடவடிக்கையும் ஏவப்பட்ட பல ஏவுகணைகளை அழிக்க முடிந்தது.

காஸா பகுதி மற்றும் லெபனான் மீது தொடர்ச்சியாக வான் மற்றும் தரைவழித் தாக்குதல்களை நடத்தி வரும் இஸ்ரேல் மீது ஈரான் நேற்று (01) பாரிய ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியது.

மக்கள்தொகை கொண்ட தலைநகரான டெல் அவிவ், ஜெருசலேம் மற்றும் ஹைஃபாவில் உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட இராணுவ இலக்குகளை குறிவைத்து தாக்குதல்கள் நடத்தப்பட்டன.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கடன் மறுசீரமைப்புச் செயற்பாடுகளுக்கு முழுமையான ஆதரவை வழங்குவோம்

சீன மக்கள் குடியரசின் தூதுவர் கீ.ஷென்ஹொங் (Qi Zhenhong) இன்று (02) ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை ஜனாதிபதி அலுவலகத்தில்...

காணாமல் போன தந்தையையும் மகளையும் கண்டுபிடிக்க உதவி கோரும் பொலிஸார்

நீர்கொழும்பில் தந்தையும் மகளும் காணாமல் போன சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். கடந்த செப்டெம்பர் மாதம் 14 ஆம்...

மதுபான உற்பத்தியாளர்கள் வரி நிலுவைத் தொகையை செலுத்த கால அவகாசம்

மதுபான உற்பத்தியாளர்கள் அரசாங்கத்திற்கு செலுத்த வேண்டிய வரி நிலுவைத் தொகையை செலுத்துவதற்கு எதிர்வரும் நவம்பர் மாதம் 30ஆம் திகதி...