follow the truth

follow the truth

October, 2, 2024
Homeவிளையாட்டுஇலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரின் தோல்வியுடன் டிம் சவுதியின் முடிவு

இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரின் தோல்வியுடன் டிம் சவுதியின் முடிவு

Published on

இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் இன்னும் இரண்டு வாரங்களில் தொடங்கவுள்ள நிலையில், நியூசிலாந்து அணியின் தலைவரான டிம் சவுதி பதவி விலகுவதாக அறிவித்துள்ளார். இதனால் ரசிகர்கள் பலரும் அடுத்த தலைவர் யார் என்று குழம்பியுள்ளனர்.

பங்களாதேஷ் அணிக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றியுள்ளது. இதன் மூலமாக சொந்த மண்ணில் தொடர்ச்சியாக 18வது முறையாக டெஸ்ட் தொடரை கைப்பற்றி இந்திய அணி சாதனை படைத்துள்ளது. 2வது டெஸ்ட் போட்டியில் கிட்டத்தட்ட இரண்டரை நாட்கள் ஆட்டம் மழையால் ரத்து செய்யப்பட்டது.

இதனால் ஆட்டம் டிராவில் முடியும் என்று எதிர்பார்க்கப்பட்ட போது, வெறும் 6 செஷனில் ஒரு போட்டியை வென்று இந்திய அணி புதிய வரலாறு படைத்துள்ளது. இதனால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு முன்னேறும் பயணத்தில் இந்திய அணி அடுத்த கட்டத்திற்கு நகர்ந்துள்ளது. இதனைத் தொடர்ந்து அக்.16ஆம் திகதி நியூசிலாந்து அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி பங்கேற்கவுள்ளது.

முதல் டெஸ்ட் போட்டி அக்.16ஆம் திகதி பெங்களூர் சின்னச்சாமி மைதானத்திலும், 2வது டெஸ்ட் போட்டி அக்.24ஆம் திகதி புனே மைதானத்திலும், கடைசி டெஸ்ட் போட்டி நவம்பர் 1ஆம் திகதி மும்பை வான்கடே மைதானத்திலும் நடக்கவுள்ளது. இதனால் இந்திய டெஸ்ட் அணி வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. பங்களாதேஷ் டி20 தொடரில் சூர்யகுமார் தலைமையில் புதிய வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

நியூசிலாந்து – இந்தியா இடையிலான டெஸ்ட் தொடர் தொடங்குவதற்கு இன்னும் 14 நாட்களே உள்ள நிலையில், நியூசிலாந்து டெஸ்ட் அணியின் தலைவர் டிம் சவுதி பதவியை இராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். இதுவரை நியூசிலாந்து அணிக்காக 102 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 382 டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்தியவர் டிம் சவுதி. கேன் வில்லியம்சன் 2022ஆம் ஆண்டு தலைவர் பதவியில் இருந்து விலகிய பின், அந்த பொறுப்புக்கு டிம் சவுதி வந்தார்.

நியூசிலாந்து அணியை 14 போட்டிகளில் வழிநடத்திய டிம் சவுதி, 6 வெற்றி, 6 தோல்வி, 2 டிராவுடன் பயணத்தை முடித்து கொண்டுள்ளார். இதுகுறித்து டிம் சவுதி பேசுகையில், டெஸ்ட் கிரிக்கெட்டில் நியூசிலாந்து அணியின் தலைவராக செயல்பட்டதை பெருமையாக உணர்கிறேன். எப்போதும் நியூசிலாந்து அணியின் வெற்றியை முன்னிலைப்படுத்தியே இயங்கி வந்துள்ளேன். இந்த முடிவும் அணியின் நலனை கருத்தில் கொண்டு எடுக்கப்பட்டது தான்.

தொடர்ந்து நியூசிலாந்து அணியின் பவுலராக செயல்பட்டு, வெற்றிக்கு நிச்சயம் பங்களிப்பேன். இளம் வீரர்களுக்கு உதவியாக இருப்பேன். அதேபோல் எனக்கு பின் கேப்டனாக பொறுப்பேற்க உள்ள டாம் லேதமுக்கு வாழ்த்துகள். கடந்த சில ஆண்டுகளாக லேதம் எனக்கு எவ்வளவு உதவியாக இருந்தாரோ, அதே அளவிற்கு அவருக்கு உறுதுணையாக இருப்பேன் என்று தெரிவித்துள்ளார்.

இதன் மூலமாக நியூசிலாந்து அணியின் அடுத்த தலைவராக டாம் லேதம் பொறுப்பேற்க உள்ளார் என்பது தெரிய வந்துள்ளது. ஏற்கனவே டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் அணிக்கு அவர் தான் தலைவராக செயல்பட்டு வருகிறார். தற்போது 3 வடிவங்களிலும் நியூசிலாந்து அணியை வழிநடத்தவுள்ளார். டிம் சவுதியின் முடிவுக்கு பின், இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் 2-0 என்ற கணக்கில் அடைந்த தோல்வியே காரணமாக பார்க்கப்படுகிறது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

10 நாடுகள் பங்கேற்கும் ICC மகளிர் டி20 உலகக்கிண்ணம் நாளை ஆரம்பம்

ஐ.சி.சி. மகளிர் டி20 உலகக்கிண்ண கிரிக்கெட் தொடர் டுபாய் மற்றும் ஷார்ஜாவில் நாளை (03) ஆரம்பமாகவுள்ளது. 3ஆம் திகதி முதல்...

டெஸ்ட் தரவரிசையில் இந்தியா முதலிடத்தை தக்கவைத்துள்ளது

பங்களாதேஷ் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடியது. இந்த தொடரின்...

தலைமைத்துவத்தால் ஏமாற்றமடைந்த பாபர் அசாமின் தீர்மானம்

பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் பாபர் அசாம் ஒருநாள் போட்டி தலைமை பதவியில் இருந்து விலகியுள்ளார். X தளத்தில் அவர் பதிவிட்டுள்ள...