follow the truth

follow the truth

September, 30, 2024
Homeஉள்நாடுபல பகுதிகளில் நீர் விநியோகம் தடை

பல பகுதிகளில் நீர் விநியோகம் தடை

Published on

அத்தியாவசிய பராமரிப்பு வேலை காரணமாக சில பிரதேசங்களுக்கு 8 மணித்தியாலங்களுக்கு நீர் ​வெட்டு அமுல்படுத்தப்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.

இன்று (12) காலை 8.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை காலப்பகுதியில் இவ்வாறு நீர்வெட்டு அமுல்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதனடிப்படையில், தியகஹ, கெகனதுர, வெஹரஹேன, கந்தர, கொட்டகொட, குடாவெல்ல, திக்வெல்ல மற்றும் ரத்மலே ஆகிய பகுதிகளுக்கு இவ்வாறு நீர் வெட்டு அமுல்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, கொழும்பின் பல பகுதிகளில் நேற்று(11) நள்ளிரவு முதல் 18 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகம் தடைப்படும் என்று தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

அதன்படி கொழும்பு 12, 13, 14 மற்றும் 15 ஆகிய பகுதிகளுக்கு நீர் விநியோகம் இடைநிறுத்தப்படவுள்ளது.

அம்பத்தலையில் இருந்து கொழும்பு வரையிலான நீர்க் குழாயின் பராமரிப்பு பணிகள் காரணமாக இவ்வாறு நீர் விநியோகம் இடைநிறுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

லெபனான் மற்றும் சிரியாவிற்கு பயணிப்பதை தவிர்க்குமாறு ஆலோசனை

மறு அறிவித்தல் வரை லெபனான் மற்றும் சிரியாவுக்கான பயணிப்பதை தவிர்க்குமாறு இலங்கையர்களுக்கு அறிவுறுத்தியுள்ளதாக வௌிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. தற்போது லெபனான்...

புலமைப்பரிசில் பரீட்சை மீண்டும் நடத்தப்படமாட்டாது – தீர்மானத்தில் மாற்றம் இல்லை

தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சையை மீண்டும் நடத்துவதில்லை என்ற எடுக்கப்பட்ட தீர்மானத்தில் மாற்றம் இல்லை என பரீட்சைகள் ஆணையாளர்...

தபால் மூல வாக்களிப்பு – விண்ணப்பங்கள் அச்சிடும் பணிகள் நிறைவு

எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு விண்ணப்பங்களை அச்சிடும் நடவடிக்கைகள் நிறைவடைந்துள்ளதாக அரச அச்சகம் தெரிவித்துள்ளது. 10 இலட்சம்...