follow the truth

follow the truth

December, 30, 2024
HomeTOP1கட்டுநாயக்க விமான நிலைய அபிவிருத்தியின் 2ம் கட்டம் விரைவில்

கட்டுநாயக்க விமான நிலைய அபிவிருத்தியின் 2ம் கட்டம் விரைவில்

Published on

ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு முகவர் நிறுவனத்தின் தலைமை பிரதிநிதி யாமோடா டெட்சூயா (YAMADA TETSUYA) உள்ளிட்ட சிரேஷ்ட பிரதிநிதிகள் குழுவினர் இன்று (01) ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவை சந்தித்தனர்.

ஜயிக்கா நிறுவனத்தினால் இலங்கையில் முன்னெடுக்கப்பட்டு வரும் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய அபிவிருத்தி திட்டத்தின் இரண்டாம் கட்டம் மற்றும் தொலைக்காட்சி ஔிபரப்பை டிஜிட்டல் மயமாக்குதல் போன்ற வேலைத்திட்டங்களை விரைவில் ஆரம்பிப்பது குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டது.

ஜயிக்கா (JICA) நிறுவனத்தின் உதவியுடன் இந்நாட்டில் முன்னெடுக்கப்படும் 11 வேலைத்திட்டங்களை விரைவில் நிறைவு செய்வது குறித்து அண்மையில் ஜப்பான் தூதுவர் மற்றும் ஜனாதிபதிக்கு இடையிலான சந்திப்பின் போது கலந்துரையாடப்பட்டதோடு, அந்த செயற்பாடுகளை துரிதப்படுத்துவது குறித்தும் இன்றைய சந்திப்பில் ஆலோசிக்கப்பட்டது.

இலங்கைக்கான ஜப்பான் தூதரகத்தின் இரண்டாம் செயலாளர் கட்சுஹிரோ சுஷூகி (KATSUHIRO SUZUKI) உள்ளிட்டோரும் இந்த சந்திப்பில் கலந்துகொண்டிருந்தனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜனாதிபதி நிதியத்தை புதிய இடத்திற்கு மாற்றுவது தொடர்பான அறிவிப்பு

ஜனாதிபதி நிதியத்தை புதிய இடத்திற்கு மாற்றுவது தொடர்பான அறிவிப்பை ஜனாதிபதி ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ளது. இதுவரை கொழும்பு 10, டி.ஆர்....

சிறுபோக சேதங்களுக்கான நட்டஈடு தொடர்பிலான அறிவித்தல்

2024 ஆம் ஆண்டுக்கான சிறுபோகத்தில் வெள்ளம், வறட்சி மற்றும் காட்டு யானையால் ஏற்பட்ட பயிர்ச் சேதங்கள் தொடர்பான சகல...

நியூசிலாந்து அணி 45 ஓட்டங்களால் வெற்றி 

இலங்கை அணிக்கும் நியூசிலாந்து அணிக்கும் இடையிலான இரண்டாவது இருபதுக்கு இருபது ஓவர் போட்டியில் நியூசிலாந்து அணி 45 ஓட்டங்களால்...