follow the truth

follow the truth

October, 1, 2024
HomeTOP1ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தினை விற்பது குறித்து புதிய அரசின் தீர்மானம்

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தினை விற்பது குறித்து புதிய அரசின் தீர்மானம்

Published on

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் குறைந்தது 51% பங்குகளை விற்பனை செய்யும் முன்னைய அரசாங்கத்தின் திட்டங்களை நிறுத்துவதற்கு தற்போதைய அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் பங்குகளை அரச நிறுவன மறுசீரமைப்புப் பிரிவின் ஊடாக விற்பனை செய்ய முன்னைய அரசாங்கம் திட்டமிட்டிருந்தது.

இதன்படி, தனியார் முதலீட்டாளரை ஈர்க்கும் நடவடிக்கையாக, ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்திடம் உள்ள 510 மில்லியன் டொலர் கடனை பொறுப்பேற்க கடந்த அரசாங்கத்தின் அமைச்சரவையில் தீர்மானிக்கப்பட்டது.

எவ்வாறாயினும், ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் பங்குகளை விற்பனை செய்வதற்குப் பதிலாக, அதன் நிர்வாகத்தை மேலும் வினைத்திறனாக்குவதற்கான வழியைக் காண தற்போதைய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இதேவேளை, தற்போது நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டுள்ள சிறப்புரிமைகள் தொடர்பில் ஆராய்ந்து பரிந்துரைகளை வழங்குவதற்காக குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பங்குச் சந்தையில் ஒரு வளர்ச்சி

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் (ASPI) இன்று (01) 137.86 புள்ளிகளால் அதிகரித்துள்ளது. அதன்படி, நாள்...

ஜனாதிபதி – ஸ்ரீதரன் இடையில் சந்திப்பு

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எஸ். ஸ்ரீதரன் இன்று (01) ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி...

ஈஸ்டர் தாக்குதல் மற்றும் மத்திய வங்கி பிணைமுறி ஊழல் தொடர்பான முதல் கட்ட விசாரணைகள் ஆரம்பம்

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் மற்றும் மத்திய வங்கி பிணைமுறிச் சம்பவம் தொடர்பில் ஆரம்பக்கட்ட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவைப்...