follow the truth

follow the truth

September, 30, 2024
Homeஉள்நாடுமுஸ்லிம்களின் விடயத்தில் “விடுதலைப்புலிகள் கையாண்ட வித்தையை சாணக்கியன் கையிலெடுத்துள்ளார்”-எஸ்.எம். சபீஸ்

முஸ்லிம்களின் விடயத்தில் “விடுதலைப்புலிகள் கையாண்ட வித்தையை சாணக்கியன் கையிலெடுத்துள்ளார்”-எஸ்.எம். சபீஸ்

Published on

முஸ்லிம்களின் விடயத்தில் விடுதலைப்புலிகள் கையாண்ட வித்தையை மீண்டும் சாணக்கியன் கையிலெடுத்துள்ளார் என அக்கரைப்பற்று மாநகர சபை உறுப்பினரும் அக்கரைப்பற்று அனைத்துப் பள்ளிவாசல்கள் சம்மேளன தலைவருமான எஸ்.எம். சபீஸ் (S.M.Sabeesh) தெரிவித்தார்.

அம்பாறை – அக்கரைப்பற்று பகுதியில் உள்ள அவரது அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர்,

“நாட்டின் மூலைமுடுக்கெல்லாம் முஸ்லிம்களுக்கு காணிப்பிரச்சினை இருக்கிறது. அதுகூட தெரியாமல் சிறுபிள்ளைத்தனமாக நாடாளுமன்றத்தில் சாணக்கியன் பேசிக்கொண்டிருக்கிறார்.

தலையை துராவி கண்ணை பிடுங்கும் வேலை செய்துவரும் சாணக்கியன் எம்.பி கடந்த காலங்களில் தமிழீழ விடுதலைப்புலிகள் செய்தவற்றையே அவரும் செய்கிறார்.

வடக்கினையும் கிழக்கினையும் இணைத்து முதலமைச்சராக வருவதே சாணக்கியனின் விருப்பம் ஆகும். சாணக்கியன் எம்.பிக்கு வரலாறு தெரியாது என தமிழ் பேசும் மக்கள் கூறியிருக்கிறார்கள். அதில் உண்மை இருக்கிறது. ஏனெனில் இன்று அவருக்கு பேச்சு திறமை இருக்கலாம். அதற்காக எல்லாவற்றையும் பேசி தன்னை ஒரு திறமைசாலியாக காட்ட முயற்சிக்கின்றார்.

அவருக்கு வரலாறுகள் தெரியாது. ஆனால் அவரது வரலாறு நம் எல்லோருக்கும் தெரியும்.

கடந்த காலங்களில் அவர் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பட்டிருப்பு தொகுதி அமைப்பாளராக இருந்தவர். கிழக்கு – வடக்கு தொடர்பாக வரலாறு இன்னும் அவருக்கு தெரியாது. ஏனெனில் அவருக்கு வயது போதாது. தற்போது 30 வயதினை தான் தாண்டியிருப்பார் என்று நினைக்கின்றேன்.

வடக்கில் மக்களுக்கு நடந்த துன்பங்கள், கிழக்கிலே மக்கள் எதிர்கொண்ட பிரச்சினைகள் எதுவும் அவருக்கு தெரியும் என்பதை நாம் நம்பவில்லை. அதனால் அவருக்கு அந்த அனுபவம் காணாது என்பதே எமதும் மக்களினதும் கருத்தாகும்.

அவர் இப்பொழுது வெளிநாட்டுச் சக்திகளின் ஆசைகளை நிறைவேற்றுவதற்காகவே செயற்படுவதை அவதானிக்க முடிகின்றது. இவரது தற்போதைய தேவையானது வடக்கினையும் கிழக்கினையும் இணைத்து முதலமைச்சராக வருவதே ஆகும்.

இந்த வடக்கு கிழக்கின் இணைப்பு என்பது வெளிநாட்டு சக்தியான டயஸ்போராக்களின் விருப்பமாகும். இந்த விருப்பத்திற்கு சாணக்கியன் ஒரு உந்துகோலாக இருந்து கொண்டு இருக்கின்றார் ” என்றார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

லெபனான் மற்றும் சிரியாவிற்கு பயணிப்பதை தவிர்க்குமாறு ஆலோசனை

மறு அறிவித்தல் வரை லெபனான் மற்றும் சிரியாவுக்கான பயணிப்பதை தவிர்க்குமாறு இலங்கையர்களுக்கு அறிவுறுத்தியுள்ளதாக வௌிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. தற்போது லெபனான்...

புலமைப்பரிசில் பரீட்சை மீண்டும் நடத்தப்படமாட்டாது – தீர்மானத்தில் மாற்றம் இல்லை

தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சையை மீண்டும் நடத்துவதில்லை என்ற எடுக்கப்பட்ட தீர்மானத்தில் மாற்றம் இல்லை என பரீட்சைகள் ஆணையாளர்...

தபால் மூல வாக்களிப்பு – விண்ணப்பங்கள் அச்சிடும் பணிகள் நிறைவு

எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு விண்ணப்பங்களை அச்சிடும் நடவடிக்கைகள் நிறைவடைந்துள்ளதாக அரச அச்சகம் தெரிவித்துள்ளது. 10 இலட்சம்...