follow the truth

follow the truth

November, 24, 2024
HomeTOP2ராஜபக்ஷர்கள் திருடர்கள் என்றால் உடனடியாக சட்டத்தினை அமுல்படுத்தக் கோரிக்கை

ராஜபக்ஷர்கள் திருடர்கள் என்றால் உடனடியாக சட்டத்தினை அமுல்படுத்தக் கோரிக்கை

Published on

ராஜபக்ஷர்கள் திருடர்கள் என்றால் உடனடியாக சட்டத்தினை அமுல்படுத்தி அதன் உண்மைத்தன்மையினை நிரூபிக்குமாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இன்று(30) கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்திருந்தார்.

தொடர்ந்தும் அவர் கருத்து தெரிவிக்கையில்;

“.. இந்நாட்டில் அரசியல்வாதிகள் திருடர்கள், இந்நாட்டில் ஊழல்கள் துஷ்பிரயோகங்கள் மலிந்துள்ளன, இதனால் தான் இந்நாடு முன்னோக்கிச் செல்லாது பின்னடைவையே சந்திக்கின்றது என்றெல்லாம் மக்கள் விடுதலை முன்னணியானது (தேசிய மக்கள் சக்தி) தொடர்ந்தும் மக்களுக்கு தெரிவித்து வந்தனர்.

ஆனால் கடந்த காலங்களில் ஊடக சந்திப்புக்கள் நடாத்தி நாடகமாடியோர் மீண்டும் அதே பணியினை செய்கின்றனர். நாம் கூறுவது என்னவென்றால், அரச தலைமையும் கிடைத்து, அமைச்சரவையும் நியமிக்கப்பட்டு அனைத்து வகையான அதிகாரங்களும் கிடைத்தும் மீண்டும் ஊடக நாடகத்தினையே நடத்துகின்றனர்.

ஏதும் ஒரு இடத்தில் திருட்டு இடம்பெற்றிருந்தால், ஊடக நாடகங்களை முன்னெடுக்காது, தயவு செய்து குறித்த நபருக்கு எதிராக முறைப்பாடு செய்து பொலிஸ் விசாரணைகளை நடத்தி அவர்களை கைது செய்து சட்டத்தின் பிரகாரம் நடவடிக்கை எடுக்கக் கோருகிறோம்.

ராஜபக்ஷர்கள் திருடர்கள் என கடந்த காலங்களில் கூறியிருந்தீர்கள். 18பில்லியன் டொலர்களை உகண்டாவுக்கு விமானம் மூலம் கொண்டு சென்றதாக தெரிவித்தீர்கள். உடனடியாக இது குறித்து சாட்சிகளை தேடி உடனடியாக விசாரணை குழுவொன்றினை நிறுவி இவற்றை கண்டுபிடியுங்கள். ஏனெனில், இந்தப் பணத்தினை வெளிநாட்டுக்கு அனுப்பியதாக நீங்கள் தான் கூறியிருந்தீர்கள். இதனை கண்டுபிடிக்காது விட்டால் இதன் பின்னால் மக்கள் விடுதலை முன்னணிதான் இருக்கும் என மக்கள் நினைப்பார்கள்.

பாராளுமன்ற தேர்தலுக்கும் பழைய கதையினையே கூறி ஊடக நாடகத்தினை முன்னெடுக்க வேண்டாம் எனவும் அது நாட்டுக்கு செய்யும் பாரிய அநீதியாகும்..”

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

அர்ச்சுனாவுக்கு எதிராக குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் மற்றுமொரு முறைப்பாடு

யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவுக்கு எதிராக குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் மற்றுமொரு முறைப்பாடளிக்கப்பட்டுள்ளது. சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் குழுவொன்றினால்...

சிலிண்டரிடம் தேசியப்பட்டியல் எம்.பி பதவியை கோரும் சுதந்திரக் கட்சி

கடந்த பாராளுமன்றத் தேர்தலில் புதிய ஜனநாயக முன்னணி பெற்றுக்கொண்ட இரண்டு தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவிகளில் ஒன்றை ஸ்ரீலங்கா...

மாதிவேல வீட்டுத் தொகுதியில் 35க்கும் மேற்பட்ட புதிய எம்.பி.க்கள் வீடு கோரி விண்ணப்பம்

இந்த வருடம் புதிதாக தெரிவு செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் 35க்கும் மேற்பட்டோர் மாதிவெல வீட்டுத் தொகுதியிலிருந்து உத்தியோகபூர்வ வீடமைப்புக்கான...