பொதுத் தேர்தலில் வேட்புமனு தாக்கல் செய்யாத காரணத்தினால், அந்த வாய்ப்பை ஒருவருக்கு வழங்கியமைக்காக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய அமைப்பாளர் பதவியிலிருந்தும் அதன் உறுப்புரிமையிலிருந்தும் தாம் இராஜினாமா செய்ததாக முன்னாள் இராஜாங்க அமைச்சரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான அப்துல்லாஹ் மஹ்ருப் தெரிவித்தார்.
திருகோணமலை கிண்ணியாவிலுள்ள அவரது கட்சி அலுவலகத்தில் நேற்று (28) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மேலும் கருத்து தெரிவித்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அப்துல்லாஹ் மஹ்ருப், தலைவர் றிசாத் பதியுதீன் கிண்ணியாவிற்கு வந்து ஏற்பாட்டாளர்களுடன் கலந்துரையாடினார். அங்கு எனக்கு வழங்கப்பட இருந்த வேட்புமனு வாய்ப்பு வேறு ஒருவருக்கு வழங்கப்பட்டது.
பத்து வருடங்களாக இந்தக் கட்சியின் காரியங்களில் மிகுந்த அர்ப்பணிப்புச் செய்து அதிக வாக்குகளைப் பெற்றுள்ளேன். இப்போது ஏமாற்றமடைந்து வெளியேறுகிறேன். எனது இராஜினாமா கடிதம் எதிர்காலத்தில் கட்சித் தலைமையிடம் சமர்ப்பிக்கப்பட உள்ளது.
எதிர்காலத்தில் பொதுத் தேர்தலில் வேறு கட்சியில் இருந்து போட்டியிட தயாராக உள்ளேன். எந்த கட்சி என்று சொல்ல முடியாது என்றார்.