follow the truth

follow the truth

September, 27, 2024
HomeTOP1இலங்கை நிராகரித்த ரணிலுக்கு சர்வதேச அங்கீகாரம்..

இலங்கை நிராகரித்த ரணிலுக்கு சர்வதேச அங்கீகாரம்..

Published on

ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவர் பதவிக்கு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பெயர் முன்மொழியப்பட்டுள்ளது.

அடுத்த ஆண்டு மார்ச் மாதம் முதல் அப்பதவியை ஏற்குமாறு அவரிடம் ஏற்கனவே கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

ஆனால் ரணில் விக்கிரமசிங்க அதற்கான விருப்பத்தை இது வரை தெரிவிக்கவில்லை என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக இருந்த காலத்தில் சர்வதேச நாணய நிதியத்துடன் இணைந்து செயற்பட்ட விதத்தை அவதானித்த பின்னரே, முன்னாள் ஜனாதிபதியின் பெயர் அந்த பதவிக்கு பரிந்துரைக்கப்பட்டதாக ஆசிய அபிவிருத்தி வங்கி குறிப்பிட்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதியின் செயற்பாடுகள் உலகிற்கு முன்னுதாரணமாக அமைந்துள்ளதாகவும் ஆசிய வங்கி குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, அடுத்த பொதுத் தேர்தலிலோ அல்லது தேசியப்பட்டியலிலோ போட்டியிட்டு நாடாளுமன்றத்திற்கு போட்டியிடமாட்டேன் என தான் நினைப்பதாக ஜனாதிபதி தெரிவித்ததாக கட்சியின் பிரதித் தலைவர் ருவான் விஜயவர்தன அண்மையை ஊடக சந்திப்பொன்றில் தெரிவித்திருந்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

மின் கடவுச்சீட்டு தீர்மானத்திற்கு இடைக்காலத் தடை

இரண்டு தனியார் நிறுவனங்களிடம் இருந்து 750,000 இலத்திரனியல் கடவுச்சீட்டுகளை முறையான கொள்முதல் நடைமுறையைப் பின்பற்றாமல் கொள்வனவு செய்வதற்கு கடந்த...

புதிய அரசாங்கத்தின் இடைக்கால வரவு-செலவு திட்டம் நவம்பரில்

பொதுத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளமையால் 2025ஆம் ஆண்டின் முதல் காலாண்டிற்கான இடைக்கால வரவு-செலவு திட்டத்தை புதிய பாராளுமன்றம் கூடவுள்ள எதிர்வரும்...

புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள் முறைகேடு – குற்றவாளிகள் மீது சட்ட நடவடிக்கை

5ம் தர புலமைப்பரிசில் பரீட்சையில் சில கேள்விகள் முன்னரே வெளிவந்துள்ளதாக தெரிய வந்ததன் மூலம் ஏற்பட்டுள்ள சிக்கல் நிலை...