சுற்றுலா நியூசிலாந்து அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையில் நேற்று (26) ஆரம்பமான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் திமுத் கருணாரத்ன ஆட்டமிழந்தமை குறித்து தினேஷ் சந்திமால் கருத்து தெரிவித்துள்ளார்.
போட்டியின் முதல் நாள் ஆட்டம் முடிவடைந்த பின்னர் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அவர், திமுத் கருணாரத்னவிடம் மன்னிப்பு கோரியதாக தெரிவித்தார்.
“நான் வந்தவுடனே அவரிடம் (திமுத்) மன்னிப்பு கேட்டேன். துரதிர்ஷ்டவசமாக அவருக்கு காலில் காயம் ஏற்பட்டது. அந்த நேரத்தில் சாத்தியமான ஓட்டங்களை மட்டுமே எடுப்போம் என அவர் கூறினார். அவசர ஓட்டங்களுக்கு செல்ல வேண்டாம் என்று அவர் என்னிடம் கூறினார். அந்த ஓட்டமானது ஒரு என்று அவசர ஓட்டம் என நான் நினைக்கிறேன். அந்த குறிக்கு நான் மனதளவில் தயாராக இல்லை, அப்போது திமுத் காலில் அடிபட்டிருந்தார், அது தான் எனது நிலைப்பாடு அதுதான் அங்கு நடந்தது. ஆனால் அது என்னுடைய தவறுதான். அதனை நான் ஏற்றுக் கொள்கிறேன்..”
முதல் நாள் ஆட்டம் நிறுத்தப்படும் போது, முதல் இன்னிங்சுக்காக துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, 03 விக்கெட் இழப்புக்கு 306 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.
ஏஞ்சலோ மேத்யூஸ் ஆட்டமிழக்காமல் 78 ஓட்டங்களையும், கமிந்து மெண்டிஸ் ஆட்டமிழக்காமல் 51 ஓட்டங்களையும் பெற்றனர்.
இலங்கை இன்னிங்ஸ் சார்பாக தினேஷ் சந்திமால் தனது 16வது டெஸ்ட் சதத்தை பதிவு செய்ததுடன் 116 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டார்.