follow the truth

follow the truth

January, 8, 2025
HomeTOP1பாரியளவான குஷ் போதைப்பொருள் சிக்கியது

பாரியளவான குஷ் போதைப்பொருள் சிக்கியது

Published on

பிரித்தானிய பிரஜை ஒருவரினால் சட்டவிரோதமாக இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட குஷ் போதைப்பொருள் ஒரு தொகுதியை கட்டுநாயக்க சுங்க அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.

43 கிலோ மற்றும் 600 கிராம் எடை கொண்ட இந்த போதைப்பொருள், சுங்க வரலாற்றில் மிகப்பெரிய குஷ் போதைப்பொருள் சோதனை என்று சுங்க அதிகாரிகள் தெரிவித்தனர்.

அவர் கொண்டு வந்த இரண்டு பயணப் பொதிகளில் இந்த போதைப்பொருள் காணப்பட்டதாகவும் அவற்றின் பெறுமதி 44 கோடி ரூபாவை அண்மித்துள்ளதாகவும் சுங்கப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

21 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் பிரித்தானிய பாதுகாப்பு சேவை அதிகாரி எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்தேக நபரை மேலதிக விசாரணைகளுக்காக கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

தேர்தல் செலவு அறிக்கையை சமர்ப்பிக்காத வேட்பாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

2024 பொதுத் தேர்தல் மற்றும் அது தொடர்பான தேர்தல்களில் வருமானம் மற்றும் செலவு அறிக்கையை சமர்ப்பிக்காத வேட்பாளர்களுக்கு எதிராக...

2026லிருந்து பரீட்சைகளை வழமையான முறையில் நடாத்த முடியும்

இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தின் ஊடாக நடாத்தப்படும் பரீட்சைகளுக்கான திட்டமிடல் அடுத்த வருடத்தில் இருந்து முன்பு இடம்பெற்றது போன்று, வழமையான...

பாடசாலை உபகரணங்கள் அடங்கிய 5,000 பைகள் சீனா நன்கொடை

நாட்டின் ஆரம்பநிலைக் கல்வியைத் தொடரும் பிள்ளைகளுக்கான கிராமிய அபிவிருத்திக்கான அறக்கட்டளை (CFRD)' மற்றும் அலிபாபா நிறுவனத்தின் உதவியுடன் panda...