follow the truth

follow the truth

September, 27, 2024
HomeTOP1"மோட்டார் சைக்கிள் உரிமம் எடுத்தவர்கள் விமானம் ஓட்ட முடியாது" - தமிதா

“மோட்டார் சைக்கிள் உரிமம் எடுத்தவர்கள் விமானம் ஓட்ட முடியாது” – தமிதா

Published on

கடந்த ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் வெற்றியை ஆதரித்து பேசிய நடிகை தமிதா அபேரத்ன, ஜனாதிபதி தேர்தல் தோல்வியின் பின்னர் இவ்வாறு கருத்து தெரிவித்திருந்தார்.

“.. ஜே.வி.பி ‘கோட்டா கோ ஹோம்’ போராட்டத்தை சாதகமாக்கிக் கொண்டது என்று நினைக்கிறேன். ஏனென்றால் அந்த நபர்கள் போராடுவதில்லை. போராடுவது ஒரு பைத்தியகாரத்தனம் என்று சொன்னாலும், போராட்டம் திசைகாட்டிக்கு பலனை கொடுத்தது.

எமக்கு கவலை இல்லை. நாம் அனைவரும் சேர்ந்தே போராட்டத்தினை தொடங்கினோம். அனைவருக்கும் கட்சி நிறங்கள் என்று உண்டு.. எனது கருத்து சஜித் பிரேமதாச மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் கொள்கையுடன் பொருந்துகிறது. இன்று அரசை பொறுபேற்றுள்ளவர்கள் மக்கள் வேணாம் என்றதையும் செய்ய நேரிடும். அப்போதுதான் அவர்களுக்கு புரியும்.

நான் சொல்வது ஒன்று தான் மோட்டார் சைக்கிளுக்கு சாரதி அனுமதிப்பத்திரம் இருப்பது என்பதற்காக விமானத்தினை செலுத்துங்கள் என்றால் என்ன நடக்கும் என்று காத்திருந்து பார்ப்போம். தேவையான நேரத்தில் வீதிக்கு இறங்க நாம் பயமில்லை.. நாம் போராடியவர்கள் அதற்கு மீண்டும் எமக்கு பயிற்சி தேவையில்லை..”

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

“அன்று ஜோன் அமரதுங்க காலிமுகத்திடலில் ‘கார் ஷோ’ நடத்தியமை ஞாபாகத்திற்கு வருகிறது”

வாகனங்களை காட்டி மக்களை ஏமாற்றி அந்த வாகனங்களை ஏலம் விட்டு திறைசேரிக்கு பணத்தை எடுத்துச் செல்ல இந்த அரசு...

நாட்டின் பாதுகாப்புக்காக ஆயுதப்படைகளை அழைக்க ஜனாதிபதி உத்தரவு

நாடளாவிய ரீதியில் அனைத்து நிர்வாக மாவட்டங்களிலும் பொது ஒழுங்கை நிலைநாட்டுவதற்காக ஆயுதப்படையினரை அழைக்குமாறு ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க...

பொதுத் தேர்தலுக்கான மதிப்பீட்டுத் தொகை திறைசேரிக்கு

எதிர்வரும் நவம்பர் மாதம் 14ஆம் திகதி நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பில் 11 பில்லியன் ரூபா பெறுமதியான மதிப்பீடு...