பொதுத் தேர்தலில் திசைகாட்டி 65 இலட்சம் வாக்குகளைப் பெறும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்ற கட்சிக்கு அடுத்த பொதுத் தேர்தலில் நன்மை கிடைக்கும் எனத் தெரிவித்த எஸ்.பி.திஸாநாயக்க, பொதுத் தேர்தலில் அந்த நன்மையை தேசிய மக்கள் சக்தி பெறும் எனவும் குறிப்பிட்டார்.
பொதுத் தேர்தலில் பிரதான கட்சிகள் ஒன்றிணைந்து போட்டியிட்டால் பலமான எதிர்க்கட்சியை உருவாக்க முடியும் என எஸ்.பி.திஸாநாயக்க மேலும் தெரிவித்தார்.
மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் வகையில் அநுர குமாரவால் செல்ல முடியும் என எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்தார்.