follow the truth

follow the truth

April, 16, 2025
HomeTOP2பாஸ்மதி விலையில் மாற்றம்?

பாஸ்மதி விலையில் மாற்றம்?

Published on

உலகின் மிகப்பெரிய அரிசி ஏற்றுமதியாளரான இந்தியா, உள்நாட்டு சந்தையில் அரிசி விலையை குறைக்கும் நோக்கத்துடன் அரிசி ஏற்றுமதியை நிறுத்த நடவடிக்கை எடுத்தது.

ஆனால், அரிசியின் உயர் வகுப்பாகக் கருதப்படும் பாஸ்மதி அரிசி மற்றும் ஏற்றுமதி மீதான தடையை அவர்கள் அமுல்படுத்தவில்லை.

இருப்பினும், இந்தியா ஒரு மெட்ரிக் டன் பாஸ்மதிக்கு குறைந்தபட்ச ஏற்றுமதி விலை வரம்பு $950 என விதித்துள்ளது.

இத்தகைய கட்டுப்பாடு இருந்தபோதிலும், இந்த ஆண்டின் முதல் நான்கு மாதங்களில் இந்தியாவின் பாஸ்மதி அரிசி ஏற்றுமதி 20% அதிகரித்து 1.9 மில்லியன் மெட்ரிக் டன்னாக உள்ளது.

தற்போது இந்த விலை வரம்பை நீக்க இந்தியா நடவடிக்கை எடுத்துள்ளது.

இதன்படி, இந்தியாவில் பாஸ்மதி அரிசி ஏற்றுமதி மேலும் அதிகரிக்கும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

புதிய பயிர் சந்தைக்கு வரவுள்ள நிலையில், விலைக் கட்டுப்பாடுகளை இந்தியா நீக்கியுள்ளது.

இந்தியாவில் பாஸ்மதி அரிசி உற்பத்தி இந்த ஆண்டு 10%-12% அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த ஆண்டு, இந்தியா, கனடா, ஈராக், ஓமான், சவுதி அரேபியா மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளுக்கு 5.2 மில்லியன் மெட்ரிக் டன் பாஸ்மதி அரிசி ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.

உலகிலேயே மிக உயர்ந்த தரமான பாஸ்மதி அரிசியை இந்தியாவும் பாகிஸ்தானும் உற்பத்தி செய்கின்றன.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஐபிஎல் வரலாற்றில் 11 வரிசைகளிலும் துடுப்பெடுத்தாடிய ஒரே கிரிக்கெட் வீரர்

ஐபிஎல் வரலாற்றில் 11 வரிசைகளிலும் துடுப்பெடுத்தாடிய ஒரே கிரிக்கெட் வீரர் என்ற சாதனையை சுனில் நரைன் படைத்துள்ளார். ஐபிஎல் தொடரில்...

குறுஞ்செய்தி வந்தால் மட்டுமே சூரிய மின்படலங்களை செயலிழக்கச் செய்யுமாறு கோரிக்கை

மின் அமைப்பின் ஸ்திரத்தன்மையை உறுதி செய்யும் நோக்கில் இலங்கை மின்சார சபை வெளியிடும் குறுஞ்செய்தி வந்தால் மட்டுமே வீட்டின்...

வீட்டின் 2ம் மாடியிலிருந்து கீழே பாய்ந்த சிறுவன் – விசாரணை ஆரம்பம்

வாழைத்தோட்டம் பகுதியில் வீட்டின் இரண்டாம் மாடியிலிருந்து கீழே பாய்ந்த 12 சிறுவனொருவன் காயமடைந்த சம்பவம் தொடர்பில் விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. குறித்த...