follow the truth

follow the truth

December, 21, 2024
HomeTOP1பகிடிவதைகளை இல்லாதொழிக்க வழிகாட்டுதல்கள் - சட்டமா அதிபரால் நீதிமன்றுக்கு உத்தரவு

பகிடிவதைகளை இல்லாதொழிக்க வழிகாட்டுதல்கள் – சட்டமா அதிபரால் நீதிமன்றுக்கு உத்தரவு

Published on

அரச பல்கலைக் கழகங்களில் உள்ள பகிடிவதைகளை இல்லாதொழிக்க வழிகாட்டுதல்கள் தயாரிக்கப்பட்டுள்ளதாக சட்டமா அதிபர் உச்ச நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார்.

அரச பல்கலைக்கழகங்களில் போக்கிரித்தனத்தை ஒழிப்பதற்கான தொடர் வழிகாட்டுதல்களைத் தயாரிப்பதற்கான உத்தரவினை கோரி, 2020 ஆம் ஆண்டு ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற பகிடிவதை சம்பவத்தினால் பாதிக்கப்பட்ட மாணவர் சமர்ப்பித்த அடிப்படை உரிமை மனுவொன்று, ஜயந்த ஜயசூரிய, ஷிரான் குணரத்ன மற்றும் பிரியந்த பெர்னாண்டோ ஆகிய மூவரடங்கிய உச்ச நீதிமன்ற நீதிபதிகள் குழாம் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் கலாநிதி அவந்தி பெரேரா, அரச பல்கலைக் கழகங்களில் நிகழும் பகிடிவதை சம்பவங்களைத் தடுப்பதற்காக தொடர் வழிகாட்டுதல்கள் தயாரிக்கப்பட்டுள்ளதாக நீதிமன்றில் தெரிவித்துள்ளார்.

வழிகாட்டுதல்களின் தொடர் அனைத்து பல்கலைக்கழகங்களுக்கும் அனுப்பப்பட வேண்டும் என்றும், ஏதேனும் திருத்தங்கள் முன்மொழியப்பட்டால், அவர்களும் அவற்றைப் பெற்று இறுதி வரைவைத் தயாரிக்க வேண்டும் என்றும் தலைமை நீதிபதி குறிப்பிட்டார்.

இறுதி வரைவை தயாரித்து நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவும் தலைமை நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போது பகிடிவதை என்ற போர்வையின் கீழ் பாரவூர்த்தி டயர் ஒன்றினை உருட்டும் போது தலை மற்றும் மூளையில் பலத்த காயம் ஏற்பட்டதாகவும், இதன் காரணமாக தாம் சுமார் மூன்று மாதங்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்ததாகவும் மனுதாரர் தெரிவித்துள்ளார்.

ஆனால், அவர் இதுவரை முழுமையாக குணமடையவில்லை என்றும் மனுதாரர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இந்தச் சட்டத்தின் மூலம் தனது அடிப்படை மனித உரிமைகள் மீறப்பட்டதாக உச்ச நீதிமன்றத் தீர்ப்பை வழங்குமாறும், பல்கலைக்கழகங்களில் நிகழும் பகிடிவதை சம்பவங்களைக் களைவதற்கு தொடர் வழிகாட்டுதல்களைத் தயாரிக்க உத்தரவிடுமாறும் மனுதாரர் கோரியுள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

தாமரை கோபுரத்தை பார்வையிடுவதற்கான நேரத்தை நீடிக்க திட்டம்

பண்டிகைக் காலத்தை முன்னிட்டு கொழும்பு தாமரை கோபுரத்தை பார்வையிடுவதற்கான நேரத்தை நீட்டிக்கப்பட்ட தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதன்படி, தாமரை கோபுரம் டிசம்பர் 25...

தங்கள் வருமானம் மற்றும் செலவுகளை தெரிவிக்காத வேட்பாளர்களுக்கு ஆணைக்குழுவினால் சிவப்பு சமிஞ்ஞை

இந்த ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலுக்கான வருமானம் மற்றும் செலவு அறிக்கையை சமர்ப்பிக்காத வேட்பாளர்களின் பட்டியலை காவல்துறையிடம் வழங்கத் திட்டமிட்டுள்ளதாக...

உகண்டாவில் பரவும் ‘டிங்கா டிங்கா’ வைரஸ்

கிழக்கு ஆப்பிரிக்க நாடான உகண்டாவில் டிங்கா டிங்கா என்று பெயரிடப்பட்ட புதுவகை வைரஸ் பரவி வருகிறது. இந்த வைரஸ்...