follow the truth

follow the truth

September, 30, 2024
Homeஉள்நாடுபண்டிகைக் காலங்களில் சுகாதார வழிகாட்டுதல்களை அனைவரும் பின்பற்றவும்

பண்டிகைக் காலங்களில் சுகாதார வழிகாட்டுதல்களை அனைவரும் பின்பற்றவும்

Published on

பண்டிகைக் காலங்களில் பொதுமக்கள் அனைவரும் சுகாதார வழிகாட்டுதல்களைப் பின்பற்ற வேண்டும் என சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல கேட்டுக்கொண்டுள்ளார்.

தடுப்பூசி நடவடிக்கை திருப்திகரமான வகையில் முன்னெடுக்கப்படுவதனால் நாடு இதுவரை அடைந்துள்ள முன்னேற்றத்தை மக்கள் பாதுகாக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

சுகாதார வழிகாட்டுதல்களைப் பின்பற்றத் தவறினால் இந்த ஆண்டு புத்தாண்டுக் கொத்தணி உருவானதைப் போன்று புதிய கொத்தணி உருவாகக் கூடும் என அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டு காலப்பகுதியில் நடத்தப்படும் அனைத்து குடும்ப ஒன்றுகூடல்கள் மற்றும் விழாக்களுக்கு கட்டுப்பாடுகளை விதிப்பது நடைமுறைச் சாத்தியமற்றது என்றும் கெஹலிய ரம்புக்வெல்ல குறிப்பிட்டார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

புலமைப்பரிசில் பரீட்சை மீண்டும் நடத்தப்படமாட்டாது – தீர்மானத்தில் மாற்றம் இல்லை

தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சையை மீண்டும் நடத்துவதில்லை என்ற எடுக்கப்பட்ட தீர்மானத்தில் மாற்றம் இல்லை என பரீட்சைகள் ஆணையாளர்...

தபால் மூல வாக்களிப்பு – விண்ணப்பங்கள் அச்சிடும் பணிகள் நிறைவு

எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு விண்ணப்பங்களை அச்சிடும் நடவடிக்கைகள் நிறைவடைந்துள்ளதாக அரச அச்சகம் தெரிவித்துள்ளது. 10 இலட்சம்...

ஜனாதிபதி செயலகம் அருகில் நிறுத்தப்பட்டுள்ள வாகனங்களை பயன்படுத்தியோர் பட்டியல் வெளியீடு

ஜனாதிபதி செயலகத்திற்கு அண்மித்த வளாகத்தில் நிறுத்தப்பட்ட வாகனங்கள் தொடர்பில் பல்வேறு கருத்துக்கள் வெளியிடப்பட்டு வருவது தொடர்பில் ஜனாதிபதி செயலகத்தின்...