follow the truth

follow the truth

September, 23, 2024
HomeTOP2இலங்கையின் டொலர்பத்திரங்களின் மதிப்பு குறைந்துள்ளது

இலங்கையின் டொலர்பத்திரங்களின் மதிப்பு குறைந்துள்ளது

Published on

இலங்கையின் 9ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக அநுர குமார திஸாநாயக்க தெரிவு செய்யப்பட்டதுடன் இலங்கையின் டொலர் பத்திரத்தின் பெறுமதி குறைந்துள்ளதாக புளூம்பேர்க் செய்திச் சேவை தெரிவித்துள்ளது.

அத்துடன், சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான உதவித் திட்டம் மற்றும் கடன் மறுசீரமைப்புக்கான உடன்படிக்கைகள் அநுர குமார திஸாநாயக்கவின் வெற்றியினால் ஆபத்துக்குள்ளாகியுள்ளதாக செய்திச் சேவை தெரிவித்துள்ளது.

இன்று (23) டொலருக்கு நிகரான இலங்கைப் பத்திரங்கள் 3.1 சென்ட்களால் வீழ்ச்சியடைந்துள்ளதாக புளூம்பேர்க் செய்திச் சேவை குறிப்பிட்டுள்ளது, இது இரண்டு வருடங்களில் ஏற்பட்ட பாரிய வீழ்ச்சியாகும்.

எவ்வாறாயினும், இலங்கைக்கு சர்வதேசத்தின் ஆதரவு தேவை எனவும், அனைவருடனும் இணைந்து செயற்பட தமது அரசாங்கம் தயாராக இருப்பதாக ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தெரிவித்ததை அடுத்து ரூபாவின் பெறுமதி வலுவடைந்துள்ளதாக அந்தச் செய்திச் சேவை சுட்டிக்காட்டியுள்ளது.

மேலும் 2029 ஆம் ஆண்டில் முதிர்ச்சியடையும் பத்திரங்கள் இந்த காலாண்டில் சுமார் 15 சதவீதம் குறையும் என்று பொருளாதார ஆய்வாளர்கள் கணித்துள்ளனர் என்று புளூம்பெர்க் செய்தி சேவை தெரிவித்துள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கையிருப்பிலுள்ள எரிபொருள் குறித்து காஞ்சனா விஜேசேகர அறிவிப்பு

நாட்டில் உள்ள எரிபொருள் இருப்புக்கள் தொடர்பில் முன்னாள் மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர விளக்கமளித்துள்ளார். அவரது அதிகாரப்பூர்வ...

காபந்து அரசாங்கத்தில் நான்கு அமைச்சர்கள்..

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தல் வரை அரசாங்கத்தை நடத்துவதற்கு நான்கு அமைச்சர்களைக் கொண்ட அமைச்சரவையொன்றை நியமிப்பது தொடர்பில் ஆலோசிக்கப்பட்டு வருகின்றது. இதன்படி...

ஜனாதிபதியின் பிரத்தியேக செயலாளராக ஆனந்த விஜயபால நியமனம்

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவின் தனிப்பட்ட செயலாளராக கே. ஆனந்த விஜயபால நியமிக்கப்பட்டுள்ளார். அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில்...