follow the truth

follow the truth

September, 21, 2024
HomeTOP1பாதுகாப்பு குறித்து பொலிசாரின் விசேட அறிவிப்பு

பாதுகாப்பு குறித்து பொலிசாரின் விசேட அறிவிப்பு

Published on

எதிர்வரும் காலங்களில் நாட்டில் விசேட பாதுகாப்பு வேலைத்திட்டம் அமுல்படுத்தப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

இன்று (21) மாலை 4 மணியளவில் வாக்கெடுப்பு முடிவடைந்த பின்னர் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

பொலிஸ் உத்தியோகத்தர்களும், கலகத் தடுப்புப் பிரிவு உத்தியோகத்தர்களும் தேவைக்கேற்ப கடமையாற்றியிருப்பதாலும், பொலிஸ் வீதித் தடைகள் அமுலில் உள்ளதாலும், முடிவுகள் வெளியாகும் வரை பாதுகாப்புத் திட்டம் நாட்டில் முழுமையாகச் செயற்படும் என்றும் அவர் கூறினார்.

இதேவேளை, தேர்தலுக்குப் பின்னரான காலப்பகுதியில் மற்றும் ஒரு வார காலத்திற்குள் எந்தவொரு நபரும் வாகனங்களிலோ அல்லது பாதயாத்திரையிலோ ஊர்வலம் செல்வது முற்றாக தடை செய்யப்பட்டுள்ளதாகவும், சகல மக்களும் இந்த விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் எனவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவிக்கின்றார்.

ஒரு பிரஜை என்ற வகையில், சட்டத்தை அமைதியாகக் கடைப்பிடித்து, நாட்டில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க இலங்கை காவல்துறைக்கு ஆதரவளிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

அமைதியை சீர்குலைக்கும் செயல் தொடர்பில் தகவல் தெரிந்தால் பின்வரும் தொலைபேசி இலக்கங்களுக்கு அறிவிக்குமாறும் பொலிஸார் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளனர்.

119
118
107 (வடக்கு, கிழக்குக்கு)

011 202 7149
011 201 3243
111 239 9104 – (தொலைநகல் எண்)

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜனாதிபதி தேர்தல் : வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரியின் அறிக்கை

அடுத்த அத்தியாயத்திற்காக எதிர்பார்ப்புடனும் நம்பிக்கையுடனும் காத்திருக்கிறோம் என வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்திருந்தார். இன்றைய தேர்தலின் முடிவு எதுவாக...

தேசிய மக்கள் சக்தியின் விசேட அறிவிப்பு

தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும் போது பொது அமைதியை நிலைநாட்டுவதற்காகவே அரசாங்கம் இரவு நேர ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்துவதாக நம்புவதாக...

இன்று இரவு 10 மணி முதல் ஊரடங்கு அமுலுக்கு

இன்று (21) இரவு 10 மணி முதல் நாளை (22) காலை 6 மணி வரை நாடு முழுவதும்...