ஜனநாய ரீதியிலான அரசியல் பரிமாற்றம் ஒன்றைக் கோரி பங்களாதேஷ் தலைநகர் டாக்காவில் ஆயிரக்கணக்கான செயற்பாட்டாளர்கள் மற்றும் எதிர்க்கட்சியான பங்களாதேஷ் தேசிய கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
பங்களாதேஷில் புதிய தேர்தல் ஒன்றை நடத்துவது குறித்த திட்டத்தை இடைக்கால அரசு இன்னும் அறிவிக்காத நிலையிலேயே இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றுள்ளது.
கடந்த மாதம் இடம்பெற்ற அரச எதிர்ப்புப் போராட்டத்தை அடுத்து பிரதமர் ஷெய்க் ஹசீனா பதவி கவிழ்க்கப்பட்டதை அடுத்தே யூனிஸின் இடைக்கால அரசு நியமிக்கப்பட்டது. எனினும் புதிய தேர்தல் எப்போது நடக்கும் என்பது பற்றி யூனிஸின் அண்மைய உரையிலும் எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.
மக்கள் விரும்புவதால் தொடர்ந்து அதிகாரத்தில் நீடிப்பதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில் யூனிஸ் தீர்க்கமான சீர்திருத்தங்களை செய்து, குறைந்தது இரண்டு ஆண்டுகள் ஆட்சியில் இருப்பார் என்று அவதானிகள் தெரிவிக்கின்றனர்.
மூன்று மாதத்தில் தேர்தலை நடத்தும்படி ஆரம்பத்தில் கோரிய பங்களாதேஷ் தேசிய கட்சி, பின்னர் இடைக்கால அரசின் சீர்திருத்தங்களை அனுமதிப்பதாக குறிப்பிட்டது.