follow the truth

follow the truth

April, 9, 2025
Homeபொலிட்டிக்கல் மேனியா06 மாதங்களில் போதைப் பொருள் விநியோகத்தை நிறுத்துவோம்

06 மாதங்களில் போதைப் பொருள் விநியோகத்தை நிறுத்துவோம்

Published on

புலனாய்வுத் துறை அறிக்கையின் பிரகாரம் 20 இலட்சம் மேலதிக வாக்குகளால் ஐக்கிய மக்கள் சக்தி வெற்றி பெறும். காலை வாருகின்ற ரணில் அநுர ஜோடி கீழ் மட்டத்திலே இருக்கின்றது. புனித தலதா மாளிகையில் தேர்தல் விஞ்ஞாபனத்தை முதன் முதலில் சமர்ப்பித்து ஆசிர்வாதத்தை பெற்றுக் கொண்ட பின்னரே நாம் தேர்தல் பணிகளை ஆரம்பித்தோம்.

தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிடப்பட்ட விடயங்கள் அனைத்தையும் புத்தபெருமானின் ஆசீர்வாதங்கள் பாதுகாக்கும் என்பதோடு நாம் நிச்சயமாக வெற்றி பெறுவோம். இந்த வெற்றியை அமைதியான முறையில் கொண்டாடுமாறு கேட்டுக் கொள்கின்றேன் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

2024 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு ஐக்கிய மக்கள் கூட்டணி ஏற்பாடு செய்த 68 ஆவது மக்கள் வெற்றி பேரணி செப்டம்பர் 18 ஆம் திகதி எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் மொனராகலையில் மிக வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் இவ்வாறு தெரிவித்தார்.

வன்முறை என்பது ஐக்கிய மக்கள் சக்தியின் கொள்கையல்ல. எனவே மாற்றுக் கொள்கையோடு இருக்கின்ற எவருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படாத வகையில் இந்த நாட்டை கட்டி எழுப்புகின்ற பயணத்தில் அனைவரையும் பங்காளர்களாக இணைத்துக் கொள்வோம். தான் மத சுதந்திரத்தை கௌரவப்படுத்துவதோடு, பௌத்தம் இந்து இஸ்லாம் கத்தோலிக்கம் ஆகிய மதங்களை பின்பற்றுவதற்கு எவருக்கும் உரிமை இருப்பதனால், அந்த உரிமையை பாதுகாப்பதோடு, மதசார்பற்ற நாட்டை உருவாக்குவதில்லை என்றும் எதிர்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

தாம் அதிகாரத்திற்கு வந்து ஆறு மாதங்களுக்குள் போதைப்பொருள் விநியோகத்தை நிறுத்துவதற்கு தேவையான அதிகபட்ச தீர்மானங்களை எடுத்து, போதைப் பொருள் மாபியாவை நிறைவுக்கு கொண்டு வருவோம் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

விவசாயிகளுக்கு 5000 ரூபாவுக்கு நிவாரண அடிப்படையில் உரத்தை வழங்குவோம். வெல்லஸ்ஸ பகுதியில் இல்லாது போன பாரம்பரியமாக விவசாயம் செய்யப்பட்ட வந்த நிலங்களை மீண்டும் பெற்றுக் கொடுப்போம். வறுமையை ஒழிப்பதற்காக ஐந்து திட்டங்களின் கீழ் மாதம் ஒன்றுக்கு இருபதாயிரம் ரூபா வீதம் 24 மாதங்களுக்கு நிவாரணங்களை வழங்குவோம். நாம் வாக்குறுதியளித்தால் அது வார்த்தைகளோடு மாத்திரம் மட்டுப்படாமல் அதனை நிதர்சனப்படுத்துவோம் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கோசல நுவனுக்கு பதிலாக சமந்த ரணசிங்க

கோசல நுவன் ஜயவீர காலமானதால் வெற்றிடமான தேசிய மக்கள் சக்தியின் கேகாலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கு சமந்த...

மோடியுடன் ஒரே மேடையில்.. நாமல் இந்தியாவுக்கு

இந்தியாவில் இன்று (8) நடைபெறவுள்ள ‘உயர்ந்து வரும் பாரதம்’ மாநாட்டில் உரையாற்றுவதற்காக இலங்கை பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர்...

மஹிந்தவின் சுகயீனம் குறித்து நாமல் கருத்து

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நலமுடன் இருப்பதாக அவரது மகன் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். வாக்குமூலம் வழங்குவது...