follow the truth

follow the truth

September, 20, 2024
HomeTOP2கொழும்பில் விசேட போக்குவரத்து திட்டம்

கொழும்பில் விசேட போக்குவரத்து திட்டம்

Published on

ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்பாளர் மற்றும் கட்சிகளின் பிரசார நடவடிக்கைகள் இன்று நள்ளிரவுடன் நிறைவடைகிறது.

இந்தநிலையில் இன்று நள்ளிரவுக்குப் பின்னர் தேர்தல் பிரசாரம், பேரணி, துண்டுப்பிரசுர விநியோகம் மற்றும் வேட்பாளர்களை ஊக்குவிக்கும் வகையில் ஏதேனும் செயற்பாடுகளில் ஈடுபடுகின்றவர்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸாருக்கு அறிவுறுத்தியுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

இதற்கமைய கொழும்பு, நுகேகொடை, கொட்டாவை மற்றும் பிலியந்தலை ஆகிய பகுதிகளில் பிரதான வேட்பாளர்களின் இறுதி பிரசார கூட்டங்களுக்கு இன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

வேட்பாளர்கள் பங்கேற்கும் இறுதிக் கூட்டங்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில், பிரசாரக் கூட்டங்கள் நடைபெறும் இடங்களில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில், போக்குவரத்து திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

இதன்படி ஐக்கிய மக்கள் கூட்டணியின் வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் பிரசாரக் கூட்டம் மருதானை டவர் மண்டபத்துக்கு முன்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது..

சுயேட்சை வேட்பாளர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பிரசாரக் கூட்டம், கிராண்ட்பாஸ் பலாமரச் சந்தியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அத்துடன் தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் அனுரகுமார திசாநாயக்கவின் கூட்டம் நுகேகொடை ஆனந்த சமரகோன் கலையரங்க வளாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் நாமல் ராஜபக்ஷவின் பிரசாரக் கூட்டம் பிலியந்தலை சோமவீர விளையாட்டு மைதானத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

 

No description available.

No description available.

No description available.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

வாக்கு பெட்டிகள், வாக்குச் சீட்டுகள் விநியோகிக்கும் பணிகள் நாளை ஆரம்பம்

வாக்கு பெட்டிகள், வாக்குச் சீட்டு உள்ளிட்ட தேர்தலுக்கான சகல ஆவணங்களையும் விநியோகிக்கும் பணிகள் நாளை காலை முதல் ஆரம்பிக்கப்படும்...

உத்தியோகபூர்வமற்ற முடிவுகளை வெளியிடுவதை தவிர்க்குமாறு கோரிக்கை

ஜனாதிபதி தேர்தலின் உத்தியோகபூர்வ முடிவுகள் வெளியாகும் வரை உத்தியோகபூர்வமற்ற முடிவுகளை வெளியிடுவதை தவிர்க்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆனந்த...

ஜனாதிபதித் தேர்தல் – பாதுகாப்பிற்காக முப்படைகளும் இணக்கம்

ஜனாதிபதித் தேர்தலின் போது அமுல்படுத்தப்பட வேண்டிய இறுதி பாதுகாப்பு வேலைத்திட்டம் பொலிஸ்மா அதிபர்களுக்கு இன்று (19) வழங்கப்பட்டதாக பொது...