இந்திய பிரதமர் நரேந்திர மோடி தனது அமெரிக்க பயணத்தின் போது அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்பை சந்திக்க உள்ளார்.
அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனது தேர்தல் பிரசாரத்தின் போது இதனை தெரிவித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அதன்படி, நரேந்திர மோடியை அடுத்த வாரம் சந்திக்கவுள்ளதாக டிரம்ப் மேலும் தெரிவித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஐக்கிய நாடுகள் பொதுச் சபை கூட்டத்தில் உரையாற்றுவதற்காக நரேந்திர மோடி வரும் 21ஆம் திகதி அமெரிக்கா செல்ல உள்ளார்.