சேறுபூசல் மற்றும் அவதூறு அரசியல் கலாச்சாரம் நாட்டில் இருந்து அகற்றப்பட வேண்டும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
ஆனமடுவ பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
அங்கு, குறுகிய அரசியல் ஆதாயம் தேடும் குழுக்கள் அரசியல் மேடைகளில் பழைய போர் நிறத்தை விற்று வாக்குகளைப் பெற முயற்சிக்கின்றன என்றார்.
எதிர்காலத்தில் உங்கள் பிள்ளைகளின் கல்வியை நவீன தலைமுறைக்கு ஏற்றவாறு கட்டியெழுப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
பாடசாலைக் கல்விக்குப் பிறகு பட்டப்படிப்பு வரை தொழில்நுட்பப் பயிற்சி மற்றும் திறன்கள் வழங்கப்படும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
ஒவ்வொரு தொகுதியிலும் தொழிற்சாலை இல்லாத பட்சத்தில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்களின் உதவியுடன் தொழிற்சாலை அமைக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
இதன்போது மேலும் தெரிவித்த ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷ;
“.. வெற்றிகரமான நபரை வெற்றிகரமான நபராக மட்டுமன்றி, வருமானம் ஈட்டுபவராகவும், தொழில்முனைவோராகவும் மாற்றும் வேலைத்திட்டத்தை நாம் நடைமுறைப்படுத்துகின்றோம். இந்த நாட்டை மீண்டும் பிளவுபடுத்தி 13வது அரசியலமைப்பு திருத்தத்தின் கீழ் காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களை வழங்க அனுமதிக்க மாட்டோம்.
மீண்டும் இந்த மக்களை எல்லையோர கிராமத்திற்குள் அடைத்து வைக்க அனுமதிக்கப்பட மாட்டாது. நீங்கள் கட்டியெழுப்பிய அரசியல் சக்தியான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன எதிர்வரும் 21ஆம் திகதி வெற்றி பெறுவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
அத்துடன், இந்த நாட்டை அபிவிருத்தியடைந்த நாடாக மாற்றும் பொறுப்பை நான் ஏற்றுக்கொள்வேன்..”