follow the truth

follow the truth

September, 19, 2024
HomeTOP1அடுத்த வருடம் முதல் அனைத்து பரீட்சைகளும் தாமதமின்றி நடைபெறும்

அடுத்த வருடம் முதல் அனைத்து பரீட்சைகளும் தாமதமின்றி நடைபெறும்

Published on

அடுத்த வருடம் முதல் அனைத்து பரீட்சைகளும் தாமதமின்றி நடைபெறும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

அடுத்த வருடம் ஜனவரி 2 ஆம் திகதி பாடசாலை தவணை ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

எவ்வாறாயினும், மூன்றாவது தவணை இரண்டு வாரங்களுக்கு நடத்தப்பட வேண்டும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

அதன்படி, ஜனவரி 20ஆம் திகதி முதல் தவணை ஆரம்பமாக உள்ளது.

சீருடை, பாடப்புத்தகம் என அனைத்தும் இப்போதே தயாராகிவிட்டன என்று உத்தரவாதம் தரலாம்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இதனை தெரிவித்தார்.

உயர்தரப் பரீட்சையை எதிர்வரும் நவம்பர் மாதம் 25ஆம் திகதி ஆரம்பிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.

கல்விப் பொதுத் தராதர பரீட்சை பெறுபேறுகளும் இன்னும் இரண்டு வாரங்களில் வெளியிடப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலங்கையின் வௌிநாட்டு தனியார் கடன் வழங்குநர்களுடன் கடன் மறுசீரமைப்பிற்கு கொள்கை ரீதியில் இணக்கம்

2023 ஆம் ஆண்டு இறுதியில் காணப்பட்ட இலங்கையின் 17.5 டொலர் பில்லியன் தனியார் வணிகக் கடன் மறுசீரமைப்பு தொடர்பிலான...

ஜனாதிபதி தலைமையில் கூடிய தேசிய பாதுகாப்பு சபை

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் தேசிய பாதுகாப்பு சபை இன்று (19) ஜனாதிபதி செயலகத்தில் கூடியது. நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலின்...

02 நாட்களுக்கு மதுபான சாலைகளை மூட தீர்மானம்

ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு எதிர்வரும் 21 மற்றும் 22ஆம் திகதிகளில் நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்து மதுபானசாலைகளும் மூடப்படவுள்ளதாக கலால்...