follow the truth

follow the truth

April, 20, 2025
Homeலைஃப்ஸ்டைல்820 கோடி மக்கள் தொகையில் 4.3 % பேரே நலமுடன் உள்ளனர் - ஆய்வில் தகவல்

820 கோடி மக்கள் தொகையில் 4.3 % பேரே நலமுடன் உள்ளனர் – ஆய்வில் தகவல்

Published on

820 கோடி கொண்ட மக்கள் தொகையில் 4.3 சதவீதம் பேரே பூரண நலமுடன் உள்ளதாக ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.

இன்றைய உலகில் மக்கள் ஏதாவது ஒரு நோயினால் அவதிப்பட்டு வைத்தியர்களை நாடிய வண்ணம் உள்ளனர். பணக்கார நாடுகள் முதல் ஏழை நாடுகள் வரை மருத்துவமனைகளில் கூட்டம் இருந்து கொண்டே உள்ளது.

இந்நிலையில் கடந்த 1990 முதல் 2013ம் ஆண்டு வரை 188 நாடுகளில் உடல்நலக்குறைவு தொடர்பாக ‘ குளோபல் பர்டன் ஒப் டிசீஸ்’ என்ற அமைப்பு ஆய்வு ஒன்றை நடத்தியது. அதனை அடிப்படையாக வைத்து ஆய்வு கட்டுரை ஒன்று ‘லான்செட்’ இதழில் வெளியாகி உள்ளது.

அதில் கூறப்பட்டுள்ளதாவது: உலகில் 820 கோடி மக்கள் வசிக்கும் நிலையில், 4.3 சதவீதம் பேர் மட்டுமே நலமுடன் உள்ளனர். மற்றவர்கள் ஏதாவது ஒரு நோயினால் அவதிப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் ஏற்பட்ட கோவிட் பெருந்தொற்று இந்த எண்ணிக்கையை அதிகரித்து இருக்கும். பெரும்பாலான மக்கள் முதுகுவலி, மன அழுத்தம், ரத்த சோகை, தொண்டை புண், வயது முதிர்வால் காது கேளாமை ஆகியவற்றால் அவதிப்படுகின்றனர்.

50 சதவீத மக்கள் தசை தொடர்பான பிரச்சினைகள், மனநலம், போதைப்பொருள் பயன்பாடு தொடர்பானவற்றால் அவதிப்படுகின்றனர். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

இன்றைய உலகில் மருத்துவ அறிவியலை காட்டிலும் புதிய நோய்கள் மிக வேகமாக உருவாகி ஆரோக்கியத்திற்கு பெரிய சவாலாக உள்ளது என்பது தெளிவாகிறது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இளநீர் இருக்கா? அப்போ இத ட்ரை பண்ணுங்க! வெயிலுக்கு இதமான சர்பத்

கோடை கால வெயிலுக்கு இதமான சர்பத் எளிதான‌‌ முறையில் செய்வது எப்படி என்று இந்த பார்க்கலாம். கோடை வெயில் காலம்...

நடிகர் ஸ்ரீயின் உடல் நிலை குறித்து குடும்பத்தினர் அறிக்கை வெளியீடு

பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் வெளியான 'வழக்கு எண் 18/9' திரைப்படத்தின் மூலம் நடிகர் ஸ்ரீ தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர்...

எலும்பை பாதிக்கும் உணவுகள் சில..

எலும்பை பாதிக்கும் உணவுகள் குறித்து இன்று நாம் அலசுவோம்..  சோடா பானங்கள்: செயற்கை குளிர் பானங்கள் மற்றும் சோடா சேர்த்த பானங்களை...