ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிப்பதற்கு உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டை அவசியமில்லை எனவும், தேசிய அடையாள அட்டை உள்ளிட்ட தேர்தல்கள் ஆணைக்குழுவினால் குறிப்பிடப்பட்ட அடையாள அட்டையை சமர்ப்பித்து வாக்களிக்க முடியும் எனவும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர். எம். ஏ. எல். ரத்நாயக்க தெரிவித்தார்.
அடையாள அட்டையை உரிய வாக்களிப்பு நிலையத்தில் சமர்ப்பித்து வாக்குகளை அடையாளப்படுத்த முடியும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டையின் முக்கிய நோக்கம் வாக்குப்பதிவு நேரத்தில் நேரத்தை மிச்சப்படுத்துவதாகும்
உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டையில் வாக்காளர் பட்டியலின் இலக்கம் குறிப்பிடப்பட்டுள்ளதால், பட்டியலிலிருந்து பெயர் தேடுவது இலகுவானது எனவும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்தார்.