நீண்ட வார விடுமுறைக்காக கிராமங்களுக்குச் செல்லும் மக்களுக்காக இன்று (13) முதல் விசேட போக்குவரத்துச் சேவைகளை மேற்கொள்ள போக்குவரத்து அதிகாரிகள் ஏற்பாடுகளைச் செய்துள்ளனர்.
இதற்காக 60 மேலதிக பேரூந்துகள் இன்று முதல் சேவையில் ஈடுபடவுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.
கால அட்டவணையின்றி மேலதிக பேருந்துகளை இயக்கவும் தேசிய போக்குவரத்து ஆணைக்குழு திட்டமிட்டுள்ளது.
இன்று (13) மற்றும் நாளை (14) காலை பதுளையில் இருந்து கொழும்பு நோக்கி விசேட புகையிரதத்தை இயக்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக புகையிரத திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.