வாக்குப்பதிவு முடிந்ததும் வாக்குச்சாவடியில் இருந்து கொண்டு வரப்படுகின்ற வாக்குப்பெட்டிகள் எந்த மாற்றமுமின்றி உரிய வாக்கு எண்ணும் மண்டபத்திற்கு கொண்டு வரப்படுமா என சில அரசியல்வாதிகள் மற்றும் வேட்பாளர்கள் மத்தியில் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
அவ்வாறு முறைகேடு நடக்காது என தேர்தல் ஆணையம் அறிவித்தது. ஆனால் அந்த சந்தேகத்தை நீக்கும் நடவடிக்கையாக கடந்த தேர்தல்களின் போது வாக்குப்பெட்டியை வெளியில் தெரியும்படியான பையில் பூட்டு போட்டு கொண்டு வர அறிவுறுத்தல் வழங்கப்பட்டது. இந்நிலையில், அந்த நடைமுறையே இந்த தேர்தலிலும் அமல்படுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. .