follow the truth

follow the truth

December, 21, 2024
HomeTOP1எதிர்வரும் 2025 அரச ஊழியர்களின் சம்பள உயர்வில் சந்தேகம் வேண்டாம்

எதிர்வரும் 2025 அரச ஊழியர்களின் சம்பள உயர்வில் சந்தேகம் வேண்டாம்

Published on

2025ஆம் ஆண்டுக்கான அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்புக்கு இரண்டு தடவை அமைச்சரவை அங்கீகாரம் வழங்குவதற்கு எவ்வித தடையும் இல்லை என நிதி இராஜாங்க அமைச்சர் கலாநிதி ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

அனைத்து முறையான பயனாளிகளுக்கும் ரூ.25,000 வாழ்க்கைச் செலவு கொடுப்பனவு மற்றும் 24% ஆகக்குறைந்த அடிப்படை சம்பள அதிகரிப்புக்கு உரித்துடையவர்கள் என அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

2024 மே 27ஆம் திகதி அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்ட 2024/20 தீர்மானத்தின் அடிப்படையில் பல வருடங்களாக நிலவும் சம்பள முரண்பாடுகள் குறித்து ஆராய ஜனாதிபதி ஆணைக்குழு நியமிக்கப்பட்டது.

அதன் பின்னர், அந்தக் குழுவின் இடைக்கால அறிக்கை 2024 ஆகஸ்ட் 12 ஆம் திகதி மீண்டும் அமைச்சரவையால் அங்கீகரிக்கப்பட்டதாக அமைச்சர் கூறினார்.

அதன் பரிந்துரைகளின்படி, வாழ்க்கைச் செலவுக் கொடுப்பனவை 25,000 ரூபாயாக உயர்த்துதல், அடிப்படைச் சம்பளத்தை குறைந்தபட்சமாக 24% ஆக உயர்த்துதல், மருத்துவக் காப்புறுதி முறையை அறிமுகப்படுத்துதல், வாழ்க்கைச் செலவுக் கொடுப்பனவின் பாதிக்கு சமமான வாழ்வாதாரக் கொடுப்பனவை வழங்குதல்.

செப்டம்பர் 4, 2024 அன்று, மேற்படி ஆணைக்குழுவின் முழு அறிக்கையும் அமைச்சரவையால் அங்கீகரிக்கப்பட்டு, அதன்படி 08 அம்சங்களில் கொள்கை உடன்பாடு எட்டப்பட்டது.

இந்த ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் வரவு செலவுத் திட்டத்தின் பணிப்பாளர் நாயகம் கலந்து கொண்டதுடன், பண ஒதுக்கீடு தொடர்பில் எவ்வித பிரச்சினையும் இல்லை எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

அதன்படி, இந்த சம்பள அதிகரிப்பு நிச்சயம் நடக்கும் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

வைத்தியர்களின் ஓய்வு வயதை நீட்டித்து வர்த்தமானி அறிவித்தல் வெளியானது

அனைத்து வைத்தியர்களின் கட்டாய ஓய்வு வயது 63 ஆக இருக்க வேண்டும் என விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. ஓய்வூதிய...

தாமரை கோபுரத்தை பார்வையிடுவதற்கான நேரத்தை நீடிக்க திட்டம்

பண்டிகைக் காலத்தை முன்னிட்டு கொழும்பு தாமரை கோபுரத்தை பார்வையிடுவதற்கான நேரத்தை நீட்டிக்கப்பட்ட தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதன்படி, தாமரை கோபுரம் டிசம்பர் 25...

தங்கள் வருமானம் மற்றும் செலவுகளை தெரிவிக்காத வேட்பாளர்களுக்கு ஆணைக்குழுவினால் சிவப்பு சமிஞ்ஞை

இந்த ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலுக்கான வருமானம் மற்றும் செலவு அறிக்கையை சமர்ப்பிக்காத வேட்பாளர்களின் பட்டியலை காவல்துறையிடம் வழங்கத் திட்டமிட்டுள்ளதாக...