ஈஸ்டர் தாக்குதலின் மூளையாக செயல்பட்டவர்களுக்கு பாரபட்சம் இல்லாமல் உரிய தண்டனை வழங்கப்படும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கர்தினால்களுக்கு உறுதியளித்துள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும், கர்தினால் மல்கம் ரஞ்சித்திற்கும் இடையிலான சந்திப்பு இன்று (11) கொழும்பில் இடம்பெற்றது.
அங்கு, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக முறையாக நியமிக்கப்பட்ட நீதித்துறை நடவடிக்கைக்கு ஆதரவளிப்பதாகவும், நீதித்துறை நடைமுறையை மீட்டெடுக்க பாடுபடுவதாகவும், அதற்கான சட்ட நடவடிக்கைகளை எடுப்பதாகவும் கர்தினால் முன் உறுதியளித்தார்.
மேலும், உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு நிவாரணம் வழங்குவதாகவும், மூளையாக செயல்பட்டவர்களை தரம் பாராமல் தண்டிப்பதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மேலும் வலியுறுத்தியுள்ளார்.