தாம் எப்போதும் கொள்கை ரீதியான அரசியலையே செயற்படுத்துவதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
நாட்டின் அபிவிருத்திக்கான சரியான வேலைத்திட்டத்தை தமது கட்சி அறிமுகப்படுத்தியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மூதூர் பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே நாமல் ராஜபக்ஷ மேற்கண்டவாறு தெரிவித்தார்.
“… நாம் தெளிவாக ஒரு கொள்கை ரீதியான அரசியல் கட்சி, இந்த கிழக்கு மக்களுக்கு வாழும் உரிமையை வழங்கியவர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ. முதியவர்கள் விடுதலைப் புலிகளின் பயங்கரவாதத்தில் சிக்கி எதிர்கால நம்பிக்கையின்றி வாழ்ந்தனர்.
திருகோணமலை மாவட்டம், சேருவாவில இன்று கடற்படை மற்றும் விமான நிலையமாக மாற்றப்படுகிறது. மறுபுறம், சுற்றுலாத்துறைக்கு முன்னுரிமை அளிக்கப்படும் கிழக்கு மாகாணத்தில் சுற்றுலா மையமாக இந்தப் பகுதி உருவாக்கப்பட்டுள்ளது. எங்களிடம் அந்த திட்டம் இருந்தது.
நான் உருவாக்கும் அரசில் சுற்றுலாவை மையப்படுத்தி, திருகோணமலையை சுற்றுலா கப்பல்களை கொண்டு வரும் மையமாக மாற்றுவேன். அனைத்து கலாச்சாரங்களையும் பாதுகாத்து, இளைஞர்கள் விரும்பும் எதிர்காலத்தை உருவாக்க தேவையான கொள்கை முடிவுகளை எடுப்போம்…”