குவைத் நாட்டின் துணைப்பிரதமர் இமாத் அதீகி பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
இவர் அந்நாட்டின் எண்ணெய் வளத்துறை அமைச்சர் பொறுப்பையும் கவனித்து வந்தார். இவரை பதவியில் இருந்து நீக்குவதாக குவைத் மன்னர் மிஷால் அல்-அகமத் அல்-ஜாபர் அல்-சபா அறிவித்துள்ளார்.
இந்த தகவலை குவைத் அரசு நடத்தும் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது.
குவைத் நிதி அமைச்சரும், பொருளாதார விவகார அமைச்சருமான நூரா பசாமுக்கு எண்ணெய் வளத்துறை கூடுதல் பொறுப்பாக வழங்கப்படுவதாகவும் மன்னர் அறிவித்துள்ளார்.
இந்த பதவி நீக்கத்துக்கான காரணம் வெளியாகவில்லை.