எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலின் செயற்பாடுகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக ஜனாதிபதி வேட்பாளர்கள் அல்லது அவர்களது பிரதிநிதிகள் இன்று (09) தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
இந்த கலந்துரையாடல் இன்று காலை 10.00 மணிக்கு இடம்பெறவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
மேலும், தேர்தல் கண்காணிப்பு அமைப்புகளின் பிரதிநிதிகள் இன்று பிற்பகல் 2.00 மணிக்கு தேர்தல் ஆணைக்குழுவில் அழைக்கப்படவுள்ளனர்.