follow the truth

follow the truth

November, 22, 2024
Homeஉலகம்ரஷ்ய அதிபர் புடின் கமலா ஹாரிஸுக்கு ஆதரவு

ரஷ்ய அதிபர் புடின் கமலா ஹாரிஸுக்கு ஆதரவு

Published on

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெற உள்ள நிலையில், குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் போட்டியிடுகிறார்.

ஜனநாயக கட்சி சார்பில் தற்போதைய துணை அதிபரான இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிஸ் போட்டியிடுகிறார்.

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் தொடர்பான கருத்துக்கணிப்புகளில் டிரம்பை விட கமலா ஹாரிஸ் முன்னிலையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. இதற்கிடையே சமீபத்திய கருத்துக்கணிப்பில் இருவரும் இடையே சிறிய அளவில்தான் வித்தியாசம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் கமலா ஹாரிஸை ஆதரிப்பதாக ரஷ்ய அதிபர் புடின் தெரிவித்துள்ளார்.

விலடிவோஸ்டாக்கில் உள்ள கிழக்கு பொருளாதார மன்றத்தில் பேசிய புடின், “அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பைடன் தான் எங்களது விருப்பமான வேட்பாளராக இருந்தார். ஆனால் ஜோ பைடன் போட்டியில் இருந்து விலகி கமலா ஹாரிஸை ஆதரித்தார். ஆகவே நாங்களும் கமலா ஹாரிஸை ஆதரிக்கிறோம்.

முன்பு அதிபராக இருந்த ட்ரம்ப், ரஷ்யாவிற்கு எதிராக பல கட்டுப்பாடுகளையும் தடைகளையும் விதித்தார். கமலா ஹாரிஸ் அத்தகைய செயல்களை செய்ய மாட்டார் என்று நினைக்கிறேன்.

ஆனால் இறுதியில் யார் வெற்றி பெறப்போகிறார்கள் என்பதை அமெரிக்க மக்கள் தான் முடிவு செய்வார்கள்” என்று தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

டெல்லியில் அதிகரிக்கும் காற்று மாசு

இந்தியாவின் டெல்லியில் காற்றின் தரமானது தொடர்ந்தும் மோசமான நிலையிலேயே உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று(21) காலை நிலவரப்படி, டெல்லியின் காற்று தரக்...

இஸ்ரேலிய பிரதமர் உள்ளிட்டோரை கைது செய்ய உத்தரவு

சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் யோவ் கேலன்ட்(Yoav Gallant)...

உக்ரைனிலுள்ள தூதரகத்தை தற்காலிகமாக மூடிய அமெரிக்கா

ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையிலான போர் தீவிரமடைந்துள்ள நிலையில் உக்ரைன் தலைநகர் கீவ் இல் உள்ள தமது தூதரகத்தை நேற்று...