லெபனான் மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் ரியாட் சலாமே பெய்ரூட்டில் கைது செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தரகு நிறுவனம் ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட நிதிக் குற்றங்கள் தொடர்பில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
73 வயதான சலாமே, நாட்டின் மத்திய வங்கி ஆளுநராக கிட்டத்தட்ட 30 ஆண்டுகள் பணியாற்றினார், ஆனால் அவரது இறுதி ஆண்டுகளில் நிதிக் குற்றங்களில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டார்.
பொது நிதியைப் பயன்படுத்தி மோசடி செய்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.