காசாவில் உள்ள ஹமாஸ் அமைப்பின் கீழ் இருந்த பணயக்கைதிகளை பாதுகாப்பாக விடுவிக்க தவறியதற்காக நாட்டு மக்களிடம் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மன்னிப்பு கோரியுள்ளார்.
ரஃபாவில் நிலத்தடி சுரங்கப் பாதையில் 6 பிணைக் கைதிகளின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து இஸ்ரேலிய மக்கள் அரசாங்கத்திற்கு எதிராகத் தொடங்கிய பெரும் போராட்டங்களுக்குப் பதிலளிக்கும் வகையில் அவர் இவ்வாறு மன்னிப்பு கோரியுள்ளார்.
இதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அத்துடன், இஸ்ரேலின் பிரதான தொழிற்சங்கம் தேசிய வேலை நிறுத்தமொன்றை ஆரம்பித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் மேலும் தெரிவித்துள்ளன.