2024 பரா ஒலிம்பிக் போட்டியில் ஆடவர் சக்கர நாற்காலி டென்னிஸ் போட்டியின் 2வது போட்டியில் இலங்கையின் சுரேஷ் தர்மசேனாவுடன் பிரித்தானியாவின் கோர்டன் ரீட் இன்று (01) போட்டியிட உள்ளார்.
இப்போட்டி உள்ளூர் நேரப்படி பிற்பகல் 3.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.
இதேவேளை, இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தும் நுவன் இந்திக்க, இன்று இரவு உள்ளூர் நேரப்படி 11.07 மணிக்கு t44 பிரிவில் ஆடவர் 100 மீற்றர் ஓட்டப் போட்டியின் இறுதிப் போட்டியில் பங்கேற்க உள்ளார்.