follow the truth

follow the truth

September, 18, 2024
HomeTOP1இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலை குறைப்பு

இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலை குறைப்பு

Published on

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் இன்று நள்ளிரவு (31) முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலைகளை திருத்துவதற்கு தீர்மானித்துள்ளது.

இதன்படி 344 ரூபாயாக காணப்பட்ட 92 ரக ஒக்டேன் பெற்றோல் லீற்றரின் விலை 12 ரூபாவினால் குறைக்கப்பட்டு, அதன் புதிய விலை 332 ரூபாவாகும்.

379 ரூபாயாக நிலவிய ஒக்டேன் 95 ரக பெற்றோல் லீற்றரின் விலை 02 ரூபாவினால் குறைக்கப்பட்டு, அதன் புதிய விலை 377 ரூபாவாகும்.

317 ரூபாயாக காணப்பட்ட ஓட்டோ டீசல் லீற்றரின் விலை 10 ரூபாவால் குறைக்கப்பட்டு அதன் புதிய விலை 307 ரூபாயாகும்.

355 ரூபாயக நிலவிய லங்கா சுப்பர் டீசல் 4 ஸ்டார் யூரோ 4 இன் லீற்றர் ஒன்றின் விலை 03 ரூபாவால் குறைக்கப்பட்டு அதன் புதிய விலை 352 ரூபாவாகும்.

மண்ணெண்ணெய் விலையில் மாற்றம் செய்யப்படாத நிலையில் ஒரு லீற்றர் 202 ரூபாவிற்கே விற்பனை செய்யப்படவுள்ளது.

May be an image of text

spot_img
spot_img
spot_img

LATEST NEWS

MORE ARTICLES

வாக்கெடுப்பு நிலையத்தினுள் பிரவேசிக்க அனுமதியளிக்கப்பட்டவர்கள்

ஜனாதிபதித் தேர்தல் தினத்தன்று வாக்களிப்பு நிலையத்துக்குள் பிரவேசிப்பதற்கு அனுமதியளிக்கப்பட்டவர்கள் தொடர்பில் தேர்தல் ஆணைக்குழுவினால் விசேட அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.  

செப்டம்பர் 21ம் திகதி ரயில் சேவை வழமை போன்று இயங்கும்

ஜனாதிபதி தேர்தல் எதிர்வரும் 21ஆம் திகதி சனிக்கிழமை ரயில் நேர அட்டவணை வழமை போன்று அமுல்படுத்தப்படும் என ரயில்வே...

தேசபந்து தென்னகோன் தொடர்பிலான இடையீட்டு மனு நிராகரிப்பு

தேசபந்து தென்னகோன் பொலிஸ்மா அதிபராக கடமையாற்றுவதை தடுக்கும் இடைக்கால தடை உத்தரவை நீக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட இடையீட்டு...