பங்களாதேஷ் மாணவர் போராட்டத்துக்குப் பிறகு ஆட்சியில் இருந்து வெளியேற்றப்பட்ட அவாமி லீக் கட்சியின் முக்கியஸ்தர் ஒருவரின் சடலம் இந்தியாவில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
பங்களாதேஷின் அவாமி லீக் தலைவரும், ஹசீனாவின் தீவிர ஆதரவாளருமான இஷாக் அலி கானின் சிதைந்த உடல், இந்தியா – பங்களாதேஷ் எல்லையில் உள்ள இந்தியாவின் மேகாலயா மாநிலத்தில் உள்ள வெற்றிலை தோட்டத்தில் கண்டெடுக்கப்பட்டது.
அவர் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டதும், அவரது விமான அனுமதிப்பத்திரத்தின் மூலம் சடலம் யார் என்பதும் தெரியவந்துள்ளது.
பங்களாதேஷத்தில் நடந்த அரசுக்கு எதிரான போராட்டத்துக்குப் பிறகும் பொதுமக்களின் கடும் எதிர்ப்பால் இந்தியாவுக்கு தப்பிச் செல்லும் போதே அவர் இவ்வாறு கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது.
குறித்த போராட்டத்தின் போது பாராளுமன்றத்தை ஆக்கிரமித்த போராட்டக்காரர்கள் நாட்டின் நீதித்துறையை தொட்டது சர்ச்சைக்குரிய விடயம் என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
வேலைவாய்ப்பு ஒதுக்கீட்டின் அடிப்படையில் ஹசீனாவின் அரசாங்கத்திற்கு எதிரான போராட்டம் பின்னர் இனவாத மற்றும் மத முகத்தை எடுத்தது மற்றும் நாட்டின் சிறுபான்மை இந்துக்கள் மீதான துன்புறுத்தல் உலகளவில் விமர்சிக்கப்பட்டது.
கடந்த ஜூலை மாதம் முதல் இதுவரை நடந்த போராட்டத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட இந்துக்கள் கொல்லப்பட்டுள்ளதாக இடைக்கால அரசின் சுகாதார அமைச்சின் தலைவர் தெரிவித்துள்ளார்.
அதன்படி, 1971 சுதந்திரப் போருக்குப் பிறகு பங்களாதேஷ வரலாற்றில் மிக மோசமான ரத்தக்களரியாக இது பதிவாகியுள்ளது.