follow the truth

follow the truth

April, 13, 2025
Homeஉலகம்தேர்தலில் மோசடியில் ஈடுபட்டால் மார்க் சக்கர்பெர்க்கிற்கு வாழ்நாள் சிறை

தேர்தலில் மோசடியில் ஈடுபட்டால் மார்க் சக்கர்பெர்க்கிற்கு வாழ்நாள் சிறை

Published on

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் மெட்டா மோசடி செய்தால் மார்க் சக்கர்பெர்க் தனது வாழ்க்கையை சிறையில் கழிப்பார் என்று வரவிருக்கும் சேவ் அமெரிக்கா என்ற புத்தகத்தில் டிரம்ப் எழுதி உள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

கடந்த 2020-ம் ஆண்டு நடந்த தேர்தலின்போது தனக்கு எதிராக மெட்டா தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க் சதி செய்ததாக அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் குற்றம் சாட்டி உள்ளார்.

இந்த முறை அவர் சட்டவிரோதமாக ஏதாவது செய்தால், 2024 ஜனாதிபதி தேர்தலில் ஏமாற்றும் மற்றவர்களைப் போலவே, அவர் தனது வாழ்நாள் முழுவதையும் சிறையில் கழிப்பார் என்று டிரம்ப் தனது வரவிருக்கும் சேவ் அமெரிக்கா என்ற புத்தகத்தில் எழுதி உள்ளார்.

அதில் மார்க் ஜுக்கர்பெர்க் தனக்கு எதிராக பேஸ்புக்கை வழிநடத்தியதாக அவர் குற்றம்சாட்டி உள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் எதிர்வரும்க் நவம்பர் மாதம் 5ம் திகதி நடைபெறுகிறது. இந்த தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் அதிபர் பதவிக்கு கமலா ஹாரிஸ் போட்டியிடுகிறார். குடியரசு கட்சி வேட்பாளராக டிரம்ப் போட்டியிடுகிறார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

நாளை வானில் தோன்றவுள்ள PINK MOON – ஆனால் பிங்க் நிறத்தில் காட்சியளிக்காது

இந்தியாவில் நாளை அதிகாலை 5 மணியளவில் வானில் 'இளஞ்சிவப்பு நிலவு' (PINK MOON) தோன்றவுள்ளது. இதை வெறும் கண்களால்...

புளோரிடாவில் சிறிய ரக விமானம் விபத்து – 3 பேர் பலி

தெற்கு புளோரிடாவில் நெடுஞ்சாலை அருகே சிறிய ரக விமானம் விபத்துக்குள்ளானதில் 3 பேர் உயுரிலந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. போகா...

அமெரிக்க பொருட்களிற்கு எதிராக 125 வீத வரி விதித்த சீனா

அமெரிக்க பொருட்களிற்கு எதிராக 125 வீதவரியை விதிக்கப்போவதாக சீனா அறிவித்துள்ளது. அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்படும் சில சீன பொருட்களிற்கு டிரம்ப்...