follow the truth

follow the truth

November, 25, 2024
HomeTOP2இஸ்ரேலால் ஒன்றிணையும் இஸ்லாமிய நாடுகள்

இஸ்ரேலால் ஒன்றிணையும் இஸ்லாமிய நாடுகள்

Published on

காசா மீது இஸ்ரேல் போர் நடத்தி வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இஸ்ரேல் மீது போர் நடத்த ஈரான் தயாராக உள்ளது. இந்நிலையில் தான் இஸ்ரேலுக்கு எதிராக சவூதி அரேபியாவும் அமெரிக்காவை விட்டுவிட்டு ஈரானுடன் கைகோர்க்க வாய்ப்புள்ளதாக பரபரப்பான தகவல் வெளியாகி உள்ளது.

அதுமட்டுமின்றி இஸ்ரேலுக்கு எதிராக அனைத்து இஸ்லாமிய நாடுகளும் ஒன்றிணைய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இதனால் விரைவில் 3ம் உலகப்போர் தொடங்குகிறதா? என்ற பெரிய அச்சம் ஏற்பட்டுள்ளது.

பலஸ்தீனத்தின் காசா மீது இஸ்ரேல் போர் தொடுத்துள்ளது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 7ம் திகதி ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேல் மீது வான்வெளி தாக்குதல் நடத்திய பிறகு இந்த போர் தொடங்கியது. கடந்த 10 மாதங்களாக போர் நடந்து வரும் நிலையில் காசாவில் சுமார் 40 ஆயிரம் பலஸ்தீன மக்கள் கொல்லப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த போர் விவகாரம் தற்போது உலகப்போருக்கான அச்சுறுத்தை ஏற்படுத்தி உள்ளது. அதாவது இஸ்ரேல் என்பது கிறிஸ்தவ நாடாகும். காசாவை உள்ளடக்கிய பலஸ்தீனம் இஸ்லாமிய நாடாகும். இந்நிலையில் தான் காசா மீதான போர் நடவடிக்கையை இஸ்ரேல் கைவிட வேண்டும் என்று பிற நாடுகளை போல் இஸ்லாமிய நாடுகள் தொடக்கம் முதலே கூறி வருகின்றன. ஆனால் இஸ்ரேல் போரை கைவிடவில்லை.

காசாவில் செயல்பட்டு வரும் ஹமாஸ் அமைப்பினரை முற்றிலுமாக அழிப்போம் என்று இஸ்ரேல் சூளுரைத்து தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இதனை ஈரான் கடுமையாக கண்டித்துள்ளது. மேலும் போரை கைவிடாவிட்டால் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தப்படும் என அறிவித்தது. அதுமட்டுமின்றி இஸ்ரேலுடன் எல்லையை பகிர்ந்து கொள்ளும் லெபனான் நாட்டில் இயங்கி வரும் ஆதரவு அமைப்பான ஹிஸ்புல்லா மூலம் ஈரான் தாக்க தொடங்கியது.

அப்போது ஹிஸ்புல்லா இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் கோபமான இஸ்ரேல் ஹமாஸ் அமைப்பின் அரசியல் பிரிவு தலைவராக இருந்த இஸ்மாயில் ஹனியே ஈரான் தலைகர் டெஹ்ரானில் வைத்து கொன்றது. இந்த கொலையை செய்தது இஸ்ரேலின் உளவு அமைப்பு என கூறப்படுகிறது. இதனால் இஸ்ரேல் மீது ஈரான் கடும் கோபம் அடைந்துள்ளது. போரை தொடங்குவதில் உறுதியாக உள்ளது. லெபனானில் செயல்பட்டு வரும் ஹிஸ்புல்லா அமைப்பு மூலம் தொடர்ந்து இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது.

மேலும் இஸ்ரேலுக்கு எதிராக இஸ்லாமிய நாடுகளை ஒன்றிணைக்கும் பணியில் ஈரான் செயல்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக ஈரானின் புதிய ஜனாதிபதி மசூத் பெசஷ்கியானும், கத்தார் பிரதமர் அப்துல் ரஹ்மான் அல் தானியும் நேரில் சந்தித்து பேசியுள்ளனர். இந்த மீட்டிங் என்பது ஈரான் தலைநகர் டெஹ்ரானில் நடந்தது. ஈரானின் புதிய ஜனாதிபதியாக மசூத் பெசஷ்கியான் தேர்வான பிறகு கத்தார் பிரதமர் அப்துல் ரஹ்மான் அல் தானி அங்கு முதல் முறையாக சென்ற நிலையில் இந்த சந்திப்பு நடந்தது.

அப்போது போர் நிறுத்தம் தொடர்பாக கத்தாரின் நடவடிக்கையை ஈரான் ஜனாதிபதி மசூத் பெசஷ்கியான் பாராட்டு தெரிவித்தார். இந்த வேளையில் இஸ்ரேலின் போர் குற்றத்தை தடுக்க வேண்டும். இதற்காக அனைத்து இஸ்லாமிய நாடுகளும், பிற நாடுகளும் ஒன்றாக இணைய வேண்டும் என்று தெரிவித்தார். அதேபோல் கத்தார் பிரதமர் அப்துல் ரஹ்மான் அல் தானியும், இஸ்ரேலின் நடவடிக்கையை கண்டித்தார். மேலும் சர்வதேச நாடுகள் அனைத்தும் ஒன்றாக இணைய வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

இந்நிலையில் தான் தற்போது புதிய திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது. அதாவது இஸ்ரேலுக்கு எதிராக இஸ்லாமிய நாடுகள் அனைத்தும் ஒன்றாக இணைகிறதா? என்ற பெரிய கேள்வி எழுந்துள்ளது. ஏனென்றால் ஈரானின் வெளியுறவுத்துறை அமைச்சரும், சவுதி அரேபியா நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சரும் கடந்த 25ம் திகதி தான் தொலைபேசியில் பேசினர். அப்போது இஸ்ரேல் – காசா இடையே நடக்கும் போர் குறித்து இரு தலைவர்களும் விவாதித்தனர். அதன்பிறகு தற்போது ஈரான் – கத்தார் தலைவர்கள் பேச்சுவார்த்தை நடத்தி உள்ளனர்.

அதுமட்டுமின்றி இஸ்ரேல் நாட்டின் ஜெருசலேமில் அல்-அக்ஸா மசூதி பகுதியில் யூதர்கள் பிரார்த்தனை செய்யும் வகையில் சர்ச் கட்ட இஸ்ரேல் நாட்டின் பாதுகாப்புத்துறை அமைச்சர் இடாமர் பென் ஜிவீர் கூறியுள்ளார். இதனை சவூதி அரேபியா கண்டித்துள்ள நிலையில் அதுபற்றியும் ஈரானுடன் விவாதித்துள்ளதாக கூறப்படுகிறது. தற்போது சவூதி அரேபியா அமெரிக்காவுடன் சேர்ந்து செயல்பட்டு வருகிறது. ஈரானை விட அமெரிக்காவுடன் சவூதி அரேபியா நெருக்கம் காட்டி வரும் நிலையில் தற்போது சவூதி அரேபியாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சருடன் பேசி இஸ்ரேல் விவகாரம் குறித்து பேசியுள்ளார்.

இதனால் இஸ்ரேல் விவகாரத்தில் அமெரிக்காவை விட்டு விலகி ஈரானுடன் சவூதி அரேபியா கைகோர்க்கிறதா? என்ற பெரிய கேள்வி எழுந்துள்ளது. தற்போது இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா உள்ள நிலையில் சவூதி அரேபியா ஈரான் பக்கம் சாய்ந்தால் அது இஸ்ரேலுக்கு சிக்கலை ஏற்படுத்தும். அதுமட்டுமின்றி இஸ்ரேல் மீது போர் தொடுக்க தயாராக உள்ள ஈரானுக்கு சவூதி அரேபியாவின் ஆதரவு என்பது பெரிய பூஸ்ட்டாக அமையும்.

அதேபோல் அல் அக்ஸா மசூதியில் சர்ச் கட்டுவது தொடர்பான இஸ்ரேல் பாதுகாப்பு துறை அமைச்சர் பென் ஜிவீர் கருத்தை ஜோர்டான் நாடும் விமர்சனம் செய்துள்ளது. ஜோர்டானும் இஸ்லாமிய நாடாக உள்ளது. இதனால் இஸ்ரேலுக்கு எதிரான நிலைப்பாட்டில் அனைத்து இஸ்லாமிய நாடுகளும் ஒன்றாக இணைகிறதா? அப்படி இணைந்து ஈரானுக்கு சப்போர்ட் செய்து இஸ்ரேல் மீது போர் தொடுக்கிறதா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இது நடக்கும் பட்சத்தில் நிச்சயம் அது 3ம் உலக போராக மாறலாம் என்பதால் பெரிய அச்சம் ஏற்பட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

போனஸ் வழங்க நடவடிக்கை எடுக்குமாறு மின்சார சபை ஊழியர் சங்கம் கோரிக்கை

இலங்கை மின்சார சபை இலாபகரமான நிலையை அடைந்துள்ளதால், ஊழியர்களுக்கான விசேட கொடுப்பனவை (போனஸ்) எதிர்வரும் 10 ஆம் திகதிக்கு...

சீனாவுக்கு விசா இல்லாமல் பயணம் – 9 நாடுகளுக்கு சலுகை

பொருளாதாரத்தை மேம்படுத்தும் முயற்சியில் பல நாடுகளுக்கு விசா இல்லாத நுழைவை சீனா அறிவித்துள்ளது. இந்தியாவின் அண்டை நாடாக இருக்கும் சீனாவில்...

பதுளை செங்கலடி பிரதான வீதியின் போக்குவரத்து வழமைக்கு

கடந்த 18 ஆம் திகதி பதுளை செங்கலடி பிரதான வீதியில் பசறை 13 ம் கட்டை பகுதியில் பாரிய...