தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுர குமார திஸாநாயக்க ஜனாதிபதியானால், அதிகபட்சமாக 6 மாதங்களுக்கு மட்டுமே அந்த பதவியை வகிப்பார் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர தெரிவித்துள்ளார்.
2000 ஆம் ஆண்டு பாராளுமன்றத்திற்குள் பிரவேசித்த அநுர திஸாநாயக்க எம்.பி., மக்களுக்காக எந்த நடவடிக்கையும் எடுக்காத எம்.பி என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அப்படிப்பட்ட ஒருவரால் தற்போதைய இலங்கையை அபிவிருத்தி செய்ய முடியும் என நம்ப முடியுமா? இந்நாட்டில் அதிக பொய்களை பேசும் ஒரு அரசியல்வாதி அநுர குமார என அவர் தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அதிகபட்சமாக 2 வருடங்கள் பதவி வகிப்பார் என தாம் முன்னர் தெரிவித்திருந்ததாகவும், அவருக்கு எதிரான பல வழக்குகளை வாபஸ் பெறுவதற்காகவே அவர் ஜனாதிபதியானார் எனவும் அவர் அங்கு தெரிவித்தார்.
மீரிகம பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற ஐக்கிய மக்கள் சக்தியின் அரசியல் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர மேற்கண்டவாறு தெரிவித்தார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச எந்த தவறும் செய்யாத மிகவும் சுத்தமான அரசியல்வாதி எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.