follow the truth

follow the truth

October, 5, 2024
Homeஉலகம்2025ல் வெளிநாட்டு மாணவர்களின் எண்ணிக்கையை குறைக்கும் அவுஸ்திரேலியா

2025ல் வெளிநாட்டு மாணவர்களின் எண்ணிக்கையை குறைக்கும் அவுஸ்திரேலியா

Published on

குடியேற்ற அளவை குறைக்கும் முயற்சியாக வெளிநாட்டு மாணவர்களின் எண்ணிக்கையை குறைக்கும் புதிய திட்டத்தை அவுஸ்திரேலியா அறிமுகம் செய்யவுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

உலகின் மிகப்பெரிய மாணவர் சந்தையைக் கொண்ட நாடுகளில் ஒன்றாக இருக்கும் அவுஸ்திரேலியா 2025 இல் வெளிநாட்டு மாணவர்களின் எண்ணிக்கையை 270,000 ஆக மட்டுப்படுத்தவுள்ளது.

இதன்படி ஒவ்வொரு கல்வி நிறுவனத்திற்கும் தனிப்பட்ட கட்டுப்பாடுகள் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக அரசு நேற்று (27) அறிவித்தது.

2024 ஆரம்பத்தில் அரசு வெளியிட்ட புள்ளிவிபரத்தின்படி அவுஸ்திரேலியாவில் சுமார் 717,500 வெளிநாட்டு மாணவர்கள் இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் பல்கலைக்கழகங்களில் வெளிநாட்டு மாணவர்களின் எண்ணிக்கை கொவிட்–19 தொற்றுக்கு முந்தைய நிலையை விடவும் 10 வீதமும், தனியார் தொழில் பயிற்சி நிறுவனங்களில் 50 வீதம் வரையும் அதிகரித்திருப்பதாக அவுஸ்திரேலிய கல்வி அமைச்சர் ஜேசன் கிளாரே தெரிவித்துள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இஸ்ரேலிடம் இருந்து ஈரான் பின்வாங்கப்போவதில்லை

ஈரான் மற்றும் தமது கூட்டணியினர் இஸ்ரேலிடம் இருந்து பின்வாங்கப்போவதில்லை என்று ஈரான் உயர்மட்டத் தலைவர் ஆயதொல்ல அலி கமேனி...

“இஸ்ரேலை வேரோடு பிடுங்கி எரிவோம்..”

இஸ்ரேல் தாக்குதலில் கொல்லப்பட்ட ஹிஸ்புல்லா தலைவர் நஸ்ரல்லா நினைவு கூட்டத்தில் கலந்து கொண்ட உச்சபட்ச தலைவர் அயதுல்லா அலி...

கருக்கலைப்புக்கு மெலனியா டிரம்ப் ஆதரவு

ஜனாதிபதி வேட்பாளர் டொனால்ட் ட்ரம்பின் மனைவி மெலனியா டிரம்ப், கருக்கலைப்பு செய்யும் பெண்ணின் உரிமையை வலுவாக பாதுகாக்க முன்வந்துள்ளதாக...