இலங்கை வரலாற்றின் அரசியல் வரைபடம் முற்றாக மாற்றமடைந்து தேசிய மக்கள் சக்தி வெற்றியீட்டக்கூடிய சூழ்நிலை உருவாகியுள்ளது என அக்கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
மினுவாங்கொடவில் இடம்பெற்ற தேசிய மக்கள் சக்தி பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அநுர குமார திஸாநாயக்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தமக்கு வாக்களித்த மற்றும் ஏனைய கட்சிகளுக்கு ஆதரவளித்த அனைவரையும் நாட்டைக் கட்டியெழுப்ப ஒன்றுபட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
தனது பயணத்தில் பழிவாங்கும் எண்ணம் இல்லை, நாட்டுக்காக பணி செய்யவே விரும்புவதாக அநுர குமார திஸாநாயக்க குறிப்பிட்டிருந்தார்.
சிலர் ‘ஜனாதிபதி பதவி நெற்றியில் பொறிக்கப்பட்டிருப்பதாக நினைத்து’ வேலை செய்வதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.