ஐக்கியம் என்பது சஜித் பிரேமதாசவின் கட்சியிலேயே இல்லை, அவ்வாறு இருக்க எங்கிருந்து ஐக்கியம் வரும் என தேசிய மக்கள் சக்தியின் தேசிய செயற்குழு உறுப்பினர் சமந்த வித்யாரத்ன கேள்வி எழுப்பியுள்ளார்.
தேர்தல் பிரசார கூட்டத்தில் அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்;
“.. ஐக்கியம்.. அதில் இல்லாததும் அது தான். ஐக்கிய மக்கள் சக்தியில் தவிசாளர் தனியாக தேர்தலில் இறங்கியுள்ளார் தலைவர் தனியாகக் கேட்கிறார். இது ஐக்கியமா என நான் கேட்கிறேன். தலதா கட்சியில் இருந்து சென்றார். ராஜித சென்றார்.. இதுதான் ஐக்கியமா? பெயர் என்னவோ ஐக்கிய மக்கள் சக்தி.. இது ஐக்கியமற்ற மக்கள் சக்தி என பெயரிட வேண்டும்.. சஜித்தின் முகாம் கரையும் போது நமது தேசிய மக்கள் சக்தி மாபெரும் முகாமாக வலுபெற்றுள்ளது..”