follow the truth

follow the truth

May, 11, 2025
Homeவிளையாட்டுலெஜண்ட்ஸ் லீக் கிரிக்கெட்டில் இணைந்தார் ஷிகர் தவான்

லெஜண்ட்ஸ் லீக் கிரிக்கெட்டில் இணைந்தார் ஷிகர் தவான்

Published on

இந்திய கிரிக்கெட் அணியின் இடது கை துடுப்பாட்ட வீரராக திகழ்ந்தவர் ஷிகர் தவான். 38 வயதாகும் இவர் உள்நாட்டு மற்றும் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

இந்திய அணிக்காக 34 டெஸ்ட், 167 ஒருநாள் மற்றும் 68 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். 50 ஓவர் போட்டிகளில் 6,793 ரன்கள் குவித்துள்ளார். சராசரி 44.11 ஆகும். டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 2315 ரன்கள் அடித்துள்ளார். சராசரி 40.61 ஆகும். டெஸ்ட் கிரிக்கெட்டில் 7 சதங்களும், ஒருநாள் போட்டியில் 17 சதங்களும் அடித்துள்ளார்.

ஓய்வை அறிவித்த ஷிகர் தவானுக்கு விராட் கோலி, ரோகித் சர்மா, சச்சின் உள்ளிட்ட முன்னணி வீரர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் ஓய்வு பெற்ற கிரிக்கெட் வீரர்கள் விளையாடும் கிரிக்கெட் தொடரான லெஜண்ட்ஸ் லீக் கிரிக்கெட்டில் ஷிகர் தவான் இணைந்துள்ளார். வரும் செப்டம்பர் மாதம் லெஜெண்ட்ஸ் லீக் துவங்குகிறது.

லெஜெண்ட்ஸ் லீக்கில் இணைந்தது குறித்து தவான் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், கிரிக்கெட் விளையாடுவதற்கான உடல் தகுதியுடன் தான் நான் இருக்கிறேன். கிரிக்கெட் என்பது என் வாழ்வின் பிரிக்கமுடியாத பகுதி. எனது கிரிக்கெட் நண்பர்களுடன் இணைந்து புதிய நினைவுகளை உருவாக்கி ரசிகர்களை மகிழ்விப்பதில் நான் ஆவலுடன் உள்ளேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து விராட் கோலி ஓய்வு?

இந்திய அணி அடுத்த மாதம் இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இந்த...

பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரும் ஒத்திவைப்பு

இந்தியா - பாகிஸ்தான் இடையேயான பதற்றமான சூழல் காரணமாக பாகிஸ்தான் சூப்பர் லீக் (பிஎஸ்எல்) 2025 தொடரும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நேற்றைய...

2025 ஐ.பி.எல். போட்டிகள் தற்காலிகமாக நிறுத்தம்

18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வரும் நிலையில், ஐ.பி.எல். போட்டிகள் ஒத்திவைக்கப்படுவதாக பி.சி.சி.ஐ....