follow the truth

follow the truth

November, 25, 2024
Homeபொலிட்டிக்கல் மேனியாசர்வதேச நன்கொடையாளர் மாநாட்டை நடத்துவோம்

சர்வதேச நன்கொடையாளர் மாநாட்டை நடத்துவோம்

Published on

யுத்தத்தின் பின்னர் வடகிழக்கு பிரதேசம் இன்னும் சரியான அபிவிருத்தியை நோக்கி செல்லவில்லை. வடகிழக்கு பிரதேசத்தை விருத்தியாக்கும் நோக்கில் சர்வதேச நன்கொடையாளர் மாநாட்டை ஐக்கிய மக்கள் சக்தி நடத்தி, வடகிழக்கு பகுதியை மேம்படுத்துவதோடு, முழு நாட்டையும் அபிவிருத்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்போம் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

2024 ஜனாதிபதித் தேர்தலுக்கான ஐக்கிய மக்கள் சக்தியின் 18 ஆவது மக்கள் வெற்றிப் பேரணி எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் இன்று (26) மாலை மட்டக்களப்பு, ஏறாவூர் அஹமட் பரீட் மைதானத்தில் இடம்பெற்றது.

இதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மந்த போசனை நிலைமை அதிகரித்து காணப்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றது. தேசிய போசாக்கு கொள்கையை நாட்டிற்குள் நடைமுறைப்படுத்தி, அவற்றிற்குத் தீர்வு காணுவோம். மந்த போசனையே இல்லாமல் செய்வதற்கு நடவடிக்கை எடுப்போம் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் சுட்டிக்காட்டினார்.

சுற்றுலாத்துறையை விரிவுபடுத்தி அதனூடாக ஏற்படுகின்ற அபிவிருத்தியின் பிரதிபலனை மக்களுக்கு கிடைக்கச் செய்வதோடு, அதற்கு மேலதிகமாக கடன் மாபியா காரணமாக மக்களும் கடன் சுமைக்குள் சிக்கி இருக்கின்றார்கள். சூறையாடும் ஒன்லைன் கடன் மாபியாவில் இருந்து மக்களை மீட்டெடுக்க நடவடிக்கை எடுப்போம் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

IMF ஒப்பந்தத்தை உடைக்க முடியாது.. – அமைச்சர் சமந்த வித்யாரத்ன

சர்வதேச நாணய நிதியத்துடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தை கிழித்தெறிய முடியாது என பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சர்...

வாகனமும் தங்க இடமும் வேண்டும்.. – அமைச்சர் சரோஜா போல்ராஜ்

பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் அவர்கள் அமைச்சகம் வழங்கும் வாகனத்தை தான் பயன்படுத்த...

சுஜீவ சேனசிங்க மற்றுமொரு அரசியல் முடிவில்..

ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவி கிடைக்காவிடின் மீண்டுமொரு அரசியல் தீர்மானத்தை எடுக்க வாய்ப்பு...